வெண்ணிறகு கருப்பு பட்டாணிக் குருவி
வெண்ணிறகு கருப்பு பட்டாணிக் குருவி | |
---|---|
எத்தியோப்பாவில் பரிந்துரைக்கப்பட்ட இனம் | |
மெ. லு. இன்சைனிசு அங்கோலாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மெலனிபரசு
|
இனம்: | மெ. லுகோமீல்சு
|
இருசொற் பெயரீடு | |
மெலனிபரசு லுகோமீல்சு (உருப்பெல், 1840) | |
வேறு பெயர்கள் | |
|
வெண்ணிறகு கருப்பு பட்டாணிக் குருவி (White-winged black tit-மெலனிபரசு லுகோமீல்சு) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குருவி வரிசை பறவை சிற்றினம் ஆகும். இது வெள்ளை இறக்கை பட்டாணிக் குருவி, இருண்ட கண் பட்டாணிக் குருவி அல்லது வடக்கு கருப்பு பட்டாணிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது.[2] இந்த சிற்றினம் முதன்முதலில் 1840ஆம் ஆண்டில் எட்வர்ட் ரூபெல் என்பவரால் விவரிக்கப்பட்டது.
விளக்கம்
தொகுஇது வெள்ளை இறக்கை திட்டுடன் கருப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் இது வடக்கு வெந்தோள்பட்டை பட்டாணிக் குருவியிலிருந்து (மெலனிபரசு கினென்சிசு) வேறுபடுகிறது. இது சில நேரங்களில் இருண்ட கண் கொண்டதாகக் கருதப்படுகிறது.
பரவல்
தொகுஇது மத்திய ஆப்பிரிக்காவில், மேற்கில் அங்கோலா முதல் கிழக்கில் எத்தியோப்பியா வரை காணப்படுகிறது. இதில் இரண்டு துணையினங்கள் உள்ளன.[3]
- மெ. லு. லுகோமெலாசு உருப்பெல், 1840-எத்தியோப்பியா, எரித்திரியா, சூடான் மற்றும் தெற்கு சூடான்
- மெ. லு. இன்சைனிசு கபானிசு, 1880-ஆப்பிரிக்கப் பூமத்திய ரேகை முதல் தெற்கு துணை வெப்பமண்டலப் பகுதி
வகைப்பாட்டியல்
தொகுவெள்ளை இறக்கை கருப்பு பட்டாணிக் குருவி முன்பு பரசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2013இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு இனவரலாற்றுப் பகுப்பாய்வு புதிய பேரினத்தின் தனித்துவமான உயிரிக்கிளையினை உருவாக்கிய பின்னர் மெலனிபரசுக்கு மாற்றப்பட்டது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Melaniparus leucomelas". IUCN Red List of Threatened Species 2017: e.T22731092A118693774. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22731092A118693774.en. https://www.iucnredlist.org/species/22731092/118693774. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Gosler, A. & Clement, P. (2019).
- ↑ "White-winged Black Tit (Parus leucomelas) - HBW 12, p. 731". Internet Bird Collection. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
- ↑ Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
- Gill, Frank B.; Slikas, Beth; Sheldon, Frederick H. (2005). "Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene". Auk 122 (1): 121–143. doi:10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2. https://archive.org/details/sim_auk_2005-01_122_1/page/121.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் M. leucomelas பற்றிய ஊடகங்கள்
- Data related to M. leucomelas at Wikispecies
- Sound recordings, xeno-canto