வெம்பக்கோட்டை தொல்லியல் களம்
வெம்பக்கோட்டை தொல்லியல் களம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வைப்பாற்றின் இடதுகரையில் உள்ள வெம்பக்கோட்டை கிராம ஊராட்சியின் மேட்டுக்காடு மற்றும் உச்சிமேடு பகுதியில் 25 ஏக்கர் பரப்புளவில் உள்ளது. இது சிவகாசிக்கு தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான விருதுநகருக்கு தென்மேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
2 மீட்டர் உயரம் கொண்ட வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டுப் பகுதியில் கற்காலம் முதல் மத்தியகாலம் வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தொல்லியல் மேட்டின் மேற்பரப்பில் கற்கால மட்பாண்டங்களின் சில்லுகள், மணிகள், வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள், சுடுமண் வட்டுகள், இரும்பு கசடுகள் போன்றவை கிடைத்துள்ளன.
இத்தொல்லியல் களத்தை அகழாய்வு செய்ய தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.[1]