வெற்றி நிச்சயம் நடவடிக்கை

இலங்கை இராணுவ நடவடிக்கை

வெற்றி நிச்சயம் நடவடிக்கை (Operation Definite Victory) என்பது இலங்கை அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு, குடும்பிமலை போன்ற பகுதிகளை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக 2007, சனவரி, 4 அன்று இலங்கை சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்களால் துவக்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும்.[4][5]

வெற்றி நிச்சயம் நடவடிக்கை
Operation Definite Victory
නියතයි ජය මෙහෙයුම
ஈழப் போர் பகுதி
நாள் 4, சனவரி 2007 - 11, யூலை 2007
இடம் அம்பாறை மாவட்டம், இலங்கை
காஞ்சிகுடிச்சாறிலிருந்து புலிகள் பின்வாங்கல், 20 தளங்கள் சிறப்பு அதிரடிப்படை வசம் வீழ்ச்சி[1][2][3]
பிரிவினர்
 இலங்கை சிறப்பு அதிரடிப்படை தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
DIG Nimal Lewke தெரியவில்லை
இழப்புகள்
ஒருவரும் இல்லை 4 பேர் கொல்லப்பட்டனர்

இந்த தாக்குதலின் விளைவாக, உயரடுக்கு காவல்துறை அதிரடிப்படை வீரர்களால் அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் இருபது (20) முகாம்களை கைப்பற்றப்பட்டன. அதில் ஸ்டான்லி தளம் என்பது ஒரு முக்கிய முகாமாகும்.[6] அது ஒரு பிராந்திய புலனாய்வு மற்றும் விநியோக முகாமாகவும் இருந்தது.[7] பகயாடி தளத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்தன. ஜனக் தளத்தில், இலங்கைத் தரைப்படை மற்றும் விசேட அதிரடிப்படையின் சீருடைகளை ஒத்த ஆடைகளை உருவாக்கும் இடமாக இருந்தது.[8] ஜீவன் தளம் என்பது மற்றொரு விநியோக முகாமாகும், அதில் இருந்து சிறப்பு அதிரடிப்படை கொமோண்டாக்களால் நான்கு வாகனங்களை கைப்பற்றப்பட்டன. டயானா தளம் என்பது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சந்திக்கும் இடமாகும். இந்த முகாமில் ஆடம்பர பொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.[9]

ஸ்டான்லி தளத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, விடுதலைப் புலி போராளிகள் தலைநகரான கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த பயன்படுத்தத் திட்டமிட்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட சரக்குந்து மற்றும் மோட்டார் சைக்கிளை அந்தத் தளத்தில் கண்டுபிடித்தனர். இந்த முகாமில் புலிகளால் வலுவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பெருமளவிலானோர் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.[10][11] இது தவிர, சிறப்பு அதிரடிப்படை துருப்புக்கள் அதிக அளவு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், சவப்பெட்டிகள், ஏராளமான பணியாளர் எதிர்ப்பு கண்ணிவெடிகளை மீட்க முடிந்தது,[7] வாகனங்கள்,[12] செயற்கைக்கோள் மற்றும் வானொலி ஏற்பிகள், புவியிடங்காட்டி அமைப்புகள், மின்னியற்றிகள், "சேவ் தி சில்ட்ரன்" என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் பெயர் மற்றும் சின்னம் கொண்ட படகுகள், "யுஎன்எச்சிஆர்" சின்னம் கொண்ட கூடாரங்கள் ஆகியவற்றையும் மீட்டது. இதில் ZOA Refugee Care என்ற டச்சு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள்[13] போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நன்கொடையாக அளித்த பொருட்களைக் கொண்டு திலீபன் நினைவு மருத்துவமனை என்ற பெயரில் புலிகளால் ஒரு மருத்துமனை நடத்தப்பட்டுவந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்த அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (டிஆர்ஓ) நன்கொடையாக வழங்கிய தண்ணீர் டேங்கர் லாலி ஒன்றையும் கண்டுபிடித்ததாக சிறப்பு அதிரடிப்படை மேலும் தெரிவித்தது.[7][14][15]

இந்த தாக்குதலில் அதிரடிப்படையினரால் நான்கு போராளிகள் கொல்லபட்டனர். ஒரு கட்டத்தில் தங்கள் துருப்புக்களுக்கு பதிலடி கொடுக்காமல் அப்பகுதியில் இருந்து போராளிகள் தப்பிச்சென்றதாக சிறப்பு அதிரடிப்படைக் கருத்து தெரிவித்தது.[16][17] தப்பி ஓடிய விடுதலைப் புலிப் போராளிகள் சரணடையுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தது[18] மேலும் புனர்வாழ்வுத் திட்டத்தின் பின்னர் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறியது.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "MCNS - PRESS BRIEFING". Media Center for National Security. 17 January 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928101053/http://www.nationalsecurity.lk/fullnews.php?id=3547. 
  2. "Two more LTTE camps fall to STF - Kangikadaichi Aru". Ministry of Defence. 31 January 2007 இம் மூலத்தில் இருந்து 30 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090430174154/http://www.defence.lk/new.asp?fname=20070130_01. 
  3. "STF "Niyathai Jaya" Glory Continues - Jeewananda Base Captured". Media Center for National Security. 1 February 2007 இம் மூலத்தில் இருந்து 28 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928101140/http://www.nationalsecurity.lk/fullnews.php?id=3869. 
  4. "Commandos take eight Tiger bases in Sri Lanka". Zee News. 13 January 2007. http://www.zeenews.com/znnew/articles.asp?aid=347548&sid=SAS. 
  5. "Torture chambers used by Tamil LTTE found: Defense Ministry". Lankaeverything. 16 January 2007. http://www.lankaeverything.com/vinews/srilanka/20070116005410.php?PHPSESSID=5b999d49f4ce70e551fcbe69a4f56026. 
  6. "Sri Lankan military seizes more camps of rebel LTTE". Kuwait News Agency. 14 January 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927200928/http://www.kuna.net.kw/Home/Story.aspx?Language=en&DSNO=942304. 
  7. 7.0 7.1 7.2 "Elite commando forces of the police over runs a large Tamil Tiger base in the Eastern Province of Sri Lanka". To The Center. 8 January 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929022910/http://www.tothecenter.com/news.php?readmore=637. 
  8. "Tamil Tigers in a death groan in the East of Sri Lanka, after the STF capture of Janak Camp in Amparai". ஏசியன் டிரிபியூன். 12 January 2007. http://www.asiantribune.com/index.php?q=node/4102. 
  9. "Three LTTE camps tumble as STF advances in the East". Ministry of Defence, Sri Lanka. 13 January 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927174840/http://www.defence.lk/new.asp?fname=20070113_09. 
  10. "Sri Lanka commandos capture truck packed with Tamil explosives". The China Post. 12 January 2007. http://www.chinapost.com.tw/news/archives/asiapacific/2007110/99637.htm. 
  11. "Rebel base falls in east Sri Lanka". United Press International. 12 January 2007. http://www.sttammany.com/news-detail/article/780/rebel-base-f.html. 
  12. ""Rebel camp captured in Sri Lanka's east"". பீப்புள்ஸ் டெய்லி. 11 January 2007. http://english.people.com.cn/200701/11/eng20070111_340346.html. 
  13. "Sri Lanka probes aid groups for suspected rebel links". ராய்ட்டர்ஸ். 11 January 2007. http://www.alertnet.org/thenews/newsdesk/COL227596.htm. 
  14. "INGO Tsunami Aid Found in Newly Captured LTTE's 'JANAK' Camp". Media Center for National Security. 11 January 2007. http://www.nationalsecurity.lk/fullnews.php?id=3421. 
  15. "Colombo tightens transport security". Gulf Times Newspaper. 10 January 2007. http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=126642&version=1&template_id=44&parent_id=24. 
  16. "MCNS - PRESS BRIEFING". Media Center for National Security. 17 January 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928101053/http://www.nationalsecurity.lk/fullnews.php?id=3547. 
  17. "Elite police overrun top rebel base in east Sri Lanka, says military". 8 January 2007. http://www.iht.com/articles/ap/2007/01/08/asia/AS-GEN-Sri-Lanka-Rebel-Base.php. 
  18. "Call to Surrender to Fleeing LTTE Cadres". Media Center for National Security. 13 January 2007 இம் மூலத்தில் இருந்து 28 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928101153/http://www.nationalsecurity.lk/fullnews.php?id=3467. 
  19. "Overseas jobs for Surrendered LTTE cadres". Ministry of Defence, Sri Lanka. 16 January 2007 இம் மூலத்தில் இருந்து 27 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927175712/http://www.defence.lk/new.asp?fname=20070116_03.