வெற்றி (ஒளிப்பதிவாளர்)

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

வெற்றி ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1][2] தெனாவட்டு, வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பங்காற்றியுள்ளார்.

வெற்றி
பிறப்புவெற்றி பழனிச்சாமி
சென்னை, தமிழ்நாடு,
 இந்தியா
பணிதிரைப்பட ஒளிப்பதிவாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வெற்றி, 2008ஆம் ஆண்டில் தெனாவட்டு திரைப்படத்தின் வாயிலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து, 2009ஆவது ஆண்டில் மாசிலாமணி, முனி 2:காஞ்சனா ஆகிய வெற்றித் திரைப்படங்களில் பங்காற்றினார். பின்னர் இயக்குநர் சிவாவுடன் இணைந்து சங்கம் (2009), தருவு (2012) ஆகிய தெலுங்குத் திரைப்படங்களிலும், வீரம் (2014), வேதாளம் (2015) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பங்காற்றியுள்ளார். இவரும் இயக்குநர் சிவாவும், அடையாறு திரைப்பட நிறுவனத்தில் ஒன்றாக பயின்றவர்கள் ஆவர்.[3][4]

திரைப்பட விபரம் தொகு

ஒளிப்பதிவாளராக தொகு

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர்
2008 தெனாவட்டு தமிழ்
2009 மாசிலாமணி தமிழ்
சங்கம் தெலுங்கு
2011 வேங்கை தமிழ் ஹரி
முனி 2: காஞ்சனா தமிழ்
வேலூர் மாவட்டம் தமிழ்
2012 தருவு தெலுங்கு
2013 யா யா தமிழ்
2014 வீரம் தமிழ் சிவா
லோக்யம் தெலுங்கு
2015 வேதாளம் தமிழ் சிவா

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு