வெல்ஹிட் நடவடிக்கை

வெல்ஃகிட் நடவடிக்கை அல்லது வெல்ஹிட் நடவடிக்கை (Operation Wellhit) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்தஒரு போர் நடவடிக்கை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் பிரான்சின் லே ஆவர் துறைமுக நகரை நேசநாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றின.

வெல்ஹிட் நடவடிக்கை
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி
நாள் செப்டம்பர் 17 – 22, 1944
இடம் போலோன் பிரான்சு
நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
கனடாகனடா
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
செருமனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா டேனியல் ஸ்ப்ரை செருமனி ஃபெர்டினாண்ட் ஹெய்ம்
பலம்
2 தரைப்படை பிரிகேடுகள் + கவசப்படைகள் 10,000
இழப்புகள்
600 <500 (9,500 போர்க்கைதிகள்)

கனடியப் படைகள் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் அமைந்திருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகங்களை நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்ற முயன்றன. அவை முதலில் அணுகிய டியப் துறைமுகத்திலிருந்து எதிர்ப்பின்றி ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி விட்டன. இதனை அறிந்த ஹிட்லர் கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். இதனால் கனடியப் படைகள் அடுத்து அணுகிய லே ஆவர் மற்றும் போலோன் துறைமுகங்களிலிருந்த ஜெர்மானியப் படைகள் பின்வாங்காமல எதிர்த்து சண்டையிட்டன.

போலோன் நகரைக் கைப்பற்றும் தாக்குதலுக்கு வெல்ஹிட் நடவடிக்கை என்ற குறிப்பெயர் இடப்பட்டது. போலோன் நகரம் ஜெர்மானியர்களால் கடற்புறம் வெகுவாக பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நிலப்புறம் பலவீனமான அரண்நிலைகளையே கொண்டிருந்தது. சில நாட்கள் விமான குண்டுவீச்சுகள், பீரங்கித் தாக்குதல்களுக்குப் பின்னர் செப்டமபர் 17ம் தேதி கனடியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. இத்தாக்குதலில் 8வது மற்றும் 9வது கனடிய தரைப்படை பிரிகேடுகள் பங்கேற்றன. அவற்றுடன் 79வது பிரிட்டானிய கவச டிவிசனின் சில படைப்பிரிவுகளும் பங்கேற்றன. ஐந்து நாட்கள் சண்டைக்குப் பின் செப்டம்பர் 22 மாலையில் பொலோன் நகரம் முழுவதும் நேச நாடுகள் வசமானது. அதிலிருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. நகரம் கைப்பற்றப்பட்டாலும், இடிந்து கிடந்த துறைமுகத்தைச் செப்பனிட பல நாட்களாகின - அக்டோபர் 14 வரை பொலோனில் சரக்குக் கப்பல் போக்குவரத்து துவங்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்ஹிட்_நடவடிக்கை&oldid=1378399" இலிருந்து மீள்விக்கப்பட்டது