வெளிக்கோள்

வெளிக்கோள்கள் (outer planets) என்பன, சூரிய மண்டலத்தில், சிறுகோள் பட்டைக்கு வெளியே காணப்படும் கோள்கள் ஆகும். எனவே, இச்சொல் வளிமப் பெருங்கோள்களைக் குறிக்கிறது. இவை, வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன் என்னும் நான்கும் ஆகும். 1930ல் முதன் முதலாக அறியப்பட்டதில் இருந்து, 2006ல் அது ஒரு குறுங்கோள் என வகைப்படுத்தப்படும் வரை புளூட்டோவும் ஒரு வெளிக்கோள் எனவே கருதப்பட்டு வந்தது.

மேலிருந்து கீழாக: நெப்டியூன், யுரேனசு, சனி, வியாழன் ஆகிய கோள்கள் அண்ணளவான அளவுத்திட்டத்திலும், நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

எல்லா வெளிக்கோள்களும் வளையங்களைக் கொண்டவை எனினும், சனிக் கோளுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியக்கூடிய வளையம் உண்டு. பல துணைக்கோள்கள் இருப்பது வெளிக்கோள்களுக்குப் பொதுவாக அமைந்த இன்னொரு அம்சம். வியாழனின் கனிமீடு, சனியின் டைட்டன் ஆகிய இரண்டு துணைக்கோள்களும் புதன் கோளிலும் பெரியவை. இவையும், ஐஓ, கலிஸ்டோ, யூரோப்பா, டிரைட்டன் ஆகிய துணைக்கோள்கள் புளோட்டோ, ஏரிசு ஆகியவற்றைவிடப் பெரியவை.

விபரங்கள்

தொகு
  • வியாழன்: சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பெரிய கோள் இதுவே. இதற்கு நான்கு பெரிய துணைக்கோள்கள் உள்ளன.
  • சனி: இது சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கோள். இதற்கு தெளிவாகத் தெரியும் வளையம் உண்டு.
  • யுரேனசு: இது அளவில் சூரிய மண்டலத்தின் மூன்றாவது பெரியது.
  • நெப்டியூன்: வெளிக்கோள்களில் மிகவும் சிறிய கோள். இதற்கு வக்கரித்துச் சுற்றும் ஒரு பெரிய துணைக்கோளும், பல சிறிய துணைக்கோள்களும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிக்கோள்&oldid=1824363" இலிருந்து மீள்விக்கப்பட்டது