புவியொத்த கோள்

(உட்கோள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புவியொத்த கோள்கள் (Terrestrial Planets), அல்லது உட்கோள்கள் (Inner Planet) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும்.

புவிஒத்தக் கோள், புதன், வெள்ளி, புவி, and செவ்வாய், மற்றும் சீரசு( குறுங்கோள்)

புவியொத்த கோள்கள் வளிமப் பெருங்கோள்களை விட மிக அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பண்புகள்

தொகு

சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக்கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாலும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.

வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இரண்டாம்நிலை வளிமண்டலத்தைப் பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியொத்த_கோள்&oldid=3129717" இலிருந்து மீள்விக்கப்பட்டது