இரண்டாம்நிலை வளிமண்டலம்
இரண்டாம்நிலை வளிமண்டலம் (secondary atmosphere) என்பது, கோளொன்றின் சூரியனின் உருவாக்கத்தின்போது திரண்ட வளிமப் பொருட்களில் இருந்து உருவாகாத அக்கோளின் வளிமண்டலத்தைக் குறிக்கும். இரண்டாம்நிலை வளிமண்டலம், குறித்த கோளில் ஏற்படும் எரிமலைச் செயற்பாடுகளால், அல்லது வால்வெள்ளிகளின் தாக்கங்களினால் உருவாகிறது. இத்தகைய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பது, புவியையும், புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களையும் உள்ளடக்கிய புவியொத்த கோள்களின் இயல்பாகும். வியாழன் முதலிய வெளிக்கோள்களில் இருப்பது போன்ற முதல்நிலை வளிமண்டலத்தோடு ஒப்பிடும்போது இரண்டாம்நிலை வளிமண்டலம் தடிப்புக் குறைவானது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ Dr. James Schombert (2004). "Primary Atmospheres (Astronomy 121: Lecture 14 Terrestrial Planet Atmospheres)". Department of Physics University of Oregon. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
{{cite web}}
: External link in
(help)|author=