வெளியேற்றக் கழிவு வளி
வெளியேற்ற கழிவு வளி (exhaust gas அல்லது flue gas) என்பது இயற்கை எரிவளி, பெட்ரோல், டீசல், எரிநெய் அல்லது நிலக்கரி போன்ற எரிபொருட்களை தகனம் செய்யும்பொழுது வெளியேற்றப்படும் வாயுக் கழிவுகளாகும். இதனை வாகனப் புகை, விசைப்பொறிப் புகை என்றும் அழைக்கப்படுகிறது. இது விசைப்பொறியின் வகைக்கேற்ப புகைபோக்கித் தொகுதி போன்ற வெவ்வேறு கழிவு வளி குழாய்கள் வழியே வெளியேற்றப்படுகிறது.
மோட்டார் வாகனங்கள் வெளிவிடும் கழிவுகள் வளி மாசடைதலுக்கும், பெரும் நகரங்களில் நச்சுக்காற்று உருவாவதற்கும் முக்கிய காரணிகளாகும்.[1][2][3][4] ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 53,000 பேர் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது மோட்டார் வாகனங்களின் கழிவு வளியாகும் என 2013 இல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.[5] ஐக்கிய இராச்சியத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வெளிவிடப்படும் வளி ஆண்டொன்றுக்கு 5,000 பேர் வரையில் இறப்பிற்குக் காரணம் என இதே பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மற்றுமோர் ஆய்வு தெரிவிக்கின்றது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ United States Environmental Protection Agency(30 ஏப்ரல் 2008). "EPA Tools Available as Summer Smog Season Starts". செய்திக் குறிப்பு.
- ↑ "Sprawl Report 2001: Measuring Vehicle Contribution to Smog". Sierra Club. 2001. Archived from the original on 2001-11-15. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ "Smog - Causes". The Environment: A Global Challenge. Archived from the original on 19 ஜனவரி 2001. பார்க்கப்பட்ட நாள் 25 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ (PDF) Smog — Who Does It Hurt? What You Need to Know About Ozone and Your Health (EPA-452/K-99-001). United States Environmental Protection Agency. July 1999. http://www.epa.gov/air/ozonepollution/pdfs/smog.pdf.
- ↑ Caiazzo, Fabio; Ashok, Akshay; Waitz, Ian A.; Yim, Steve H.L.; Barrett, Steven R.H. (November 2013). "Air pollution and early deaths in the United States. Part I: Quantifying the impact of major sectors in 2005". Atmospheric Environment (Elsevier) 79: 198–208. doi:10.1016/j.atmosenv.2013.05.081. Bibcode: 2013AtmEn..79..198C. http://www.sciencedirect.com/science/article/pii/S1352231013004548. பார்த்த நாள்: 25 October 2013.
- ↑ By Roland Pease. "Traffic pollution kills 5,000 a year in UK, says study". பிபிசி. http://www.bbc.com/news/science-environment-17704116.
வெளி இணைப்புகள்
தொகு- Health and Air Pollution Publication of the California Air Resources Board
- The Encyclopedia Of Filters - Dust Collection An overview of the science of dust collection systems, including those used for pollution control.