வெள்ளத்தூவல் அணை
வெள்ளத்தூவல் அணை (Vellathooval Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் வட்டத்தில் உள்ள வெள்ளத்தூவல் கிராமத்தில் முத்திரப்புழா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு நீர் திசைதிருப்பல் அணை. ஆழமான பகுதியிலிருந்து அணையின் உயரம் 16 மீட்டரும் நீளம் 75 மீட்டரும் ஆகும். செங்குளம் மின் நிலையத்திலிருந்தும் முத்திரப்புழா ஆற்றிலிருந்தும் வெள்ளத்தூவல் அணைக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையிலிருந்து நீர் ஒரு கால்வாய் அமைப்பு மூலம் பன்னியாறு அருகே உள்ள மின் நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது. நீரோட்டம் நீர் மின்சாரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது.[1][2] இந்த அணை கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[3][4]
வெள்ளத்தூவல் அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | இடுக்கி, கேரளம் |
புவியியல் ஆள்கூற்று | 9°58′27″N 77°01′40″E / 9.97417°N 77.02778°E |
நோக்கம் | மின் உற்பத்தி |
நிலை | செயல்பாட்டில் |
திறந்தது | 2016 |
உரிமையாளர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | முத்திரபுழா ஆறு |
உயரம் (அடித்தளம்) | 16 m (52 அடி) |
நீளம் | 75 m (246 அடி) |
உயரம் (உச்சி) | 472 m (1,549 அடி) |
வழிகால் வகை | கதவில்லா |
நீர்த்தேக்கம் | |
இயல்பான ஏற்றம் | 472 m (1,549 அடி) |
வெள்ளத்தூவல் நீர்மின் நிலையம் | |
ஆள்கூறுகள் | 9°58′26″N 77°01′40″E / 9.97389°N 77.02778°E |
இயக்குனர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
சுழலிகள் | 2 × 1.8 மெ.வா. |
நிறுவப்பட்ட திறன் | 3.6 MW |
இணையதளம் KSEB - Official website |
விவரக்குறிப்புகள்
தொகு- அட்சரேகை: 10 0 0′39" வ
- தீர்க்கரேகை: 77 0 01′58" கி
- ஊராட்சி: வெள்ளத்தூவல்
- கிராமம்: வெள்ளத்தூவல்
- மாவட்டம்: இடுக்கி
- ஆற்றுப் படுகை: முத்திரப்புழா
- ஆறு: முத்திரப்புழா
- அணையிலிருந்து ஆற்றுக்கு விடுவிப்பு: முத்திரப்புழா
- நிறைவு ஆண்டு: 2016
- திட்டத்தின் பெயர்: வெள்ளத்தூவல் நீர்மின் திட்டம்
- அணை வகை: பைஞ்சுதை, ஈர்ப்பு
- வகைப்பாடு: தடுப்பணை
- அதிகபட்ச நீர் மட்டம்: 474.80 மீ
- முழு நீர்த்தேக்க நிலை: 472.0 மீ
- நீர்த்தேக்கம்: 0.069 Mm3
- ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 16 மீ
- நீளம்: 75 மீ
- நீர்க்கசிவுப் பாதை: தடுப்பில்லாத
- உயர் நிலை: 472.00 மீ
- நீர் வெளியேற்றம்: 1, வட்ட வகை, 1 மீ. விட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala State Electricity Board Limited - Mudirappuzha Basin Hydro Projects". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
- ↑ "Diversion Structures in Idukki district – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
- ↑ "Vellathooval Grama Panchayath | Digital Gav". vellathoovalgp.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
- ↑ "Elkkunnu, Vellathooval Panchayat, Idukki District, Kerala, India". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.