வெள்ளி(I) செலீனைடு

வெள்ளி(I) செலீனைடு (Silver(I) selenide) என்பது Ag2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புகைப்பட அச்சிடலுக்கான நிறப்பதப்படுத்தலில், செலீனியம் நிறமொத்த வரிசை வெள்ளி கெலாட்டின் வினைபுரியும்போது இச்சேர்மம் வினைவிளை பொருளாக உருவாகிறது. செலீனியம் அச்சுநிறமூட்டியில் சோடியம் செலீனைட்டு (Na2SeO3) வினைத்திறமிக்க பகுதிப்பொருட்களில் ஒன்றாக காணப்படுகிறது. இதுவே செலீனியம் எதிர்மின் அயனிக்கான ஆதார மூலமாகவும் திகழ்கிறது. நிறப்பதப்படுத்தல் செயல்முறையில் வெள்ளியுடன் இதுவே சேர்க்கப்படுகிறது. இயற்கையில் நௌமானைட்டு என்ற பெயரில் வெள்ளி தனிமத்தின் அரியவகை கனிமமாக கிடைக்கிறது. தாழ்கந்தக வெள்ளி கனிமமாகவும் முக்கியமானதொரு வெள்ளியின் சேர்மமாகவும் நெவாதாவிலுள்ள சில சுரங்கங்களில் கிடைக்கிறது[2].

வெள்ளி(I) செலீனைடு
வெள்ளி(I) செலீனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இனங்காட்டிகள்
1302-09-6 Y
பப்கெம் 6914520
பண்புகள்
Ag2Se
வாய்ப்பாட்டு எடை 294.7 கி/மோல்
அடர்த்தி 8.216 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 896.85 °C (1,646.33 °F; 1,170.00 K)
கரையாது
Band gap 0.15 எலக்ட்ரான் வோல்ட்டு [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oP12
புறவெளித் தொகுதி P212121, No. 19
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

கட்டமைப்பு தொகு

சாய்சதுர β- முகவமைப்பு கட்டமைப்பில் வெள்ளி செலீனைடு காணப்படுகிறது. ஆனால் 130° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது கனசதுர α- Ag2Se கட்டமைப்பிற்கு மாற்றமடைகிறது. (இடக்குழு Im-3m, எண். 229 , பியர்சன் குறியீடு cI20). இம்முகப்பு நிலைமாற்றம் அயனிக்கடத்துத் திறனை பத்தாயிரம் மடங்கு அதிகமாக உயர்த்துகிறது. (2S/செ.மீ) [3]

மேற்கோள்கள் தொகு

  1. O. Madelung (2004). Semiconductors: data handbook. Birkhäuser. பக். 461. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-40488-0. https://books.google.com/books?id=v_8sMfNAcA4C&pg=PA461. 
  2. http://nevada-outback-gems.com/Reference_pages/sulfide_ores.htm Notes on naumannite.
  3. Kirchhoff F.; Holender J.M.; Gillan M.J. (1996). "Structure, dynamics, and electronic structure of liquid Ag-Se alloys investigated by ab initio simulation". Physical Review B 54: 190–202. doi:10.1103/PhysRevB.54.190. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி(I)_செலீனைடு&oldid=2277826" இலிருந்து மீள்விக்கப்பட்டது