வெள்ளி எக்சாபுளோரோபாசுப்பேட்டு

வெள்ளி எக்சாபுளோரோபாசுப்பேட்டு (Silver hexafluorophosphate) என்பது AgPF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில சமயங்களில் இச்சேர்மத்தை சில்வர்-பி.எப்-6 என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

வெள்ளி எக்சாபுளோரோபாசுப்பேட்டு
இனங்காட்டிகள்
26042-63-7 N
ChemSpider 147361 Y
InChI
  • InChI=1S/Ag.F6P/c;1-7(2,3,4,5)6/q+1;-1 Y
    Key: SCQBROMTFBBDHF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ag.F6P/c;1-7(2,3,4,5)6/q+1;-1
    Key: SCQBROMTFBBDHF-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 168464
SMILES
  • [Ag+].F[P-](F)(F)(F)(F)F
பண்புகள்
AgPF6
வாய்ப்பாட்டு எடை 252.83 கிராம்/மோல்
தோற்றம் சாம்பல் கலந்த வெண்மை
உருகுநிலை 102 °C (216 °F; 375 K)
கரிமக் கரைப்பான்கள்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு அரிக்கும் (C)
R-சொற்றொடர்கள் R34
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பயன்கள் தொகு

கனிம வேதியியலிலும், கரிம உலோக வேதியியலிலும் பொதுவாக வெள்ளி எக்சாபுளோரோபாசுப்பேட்டு ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பலவீனமான ஒருங்கிணைப்புள்ள எக்சாபுளோரோபாசுப்பேட்டு எதிர்மின் அயனிகளுடன் உள்ள ஆலைடு ஈந்தனைவிகளை இடப்பெயர்ச்சி செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆலைடு என்னும் கருப்பொருள் பொருத்தமான வெள்ளி ஆலைடை வீழ்படிவாக்குதல் மூலம் அடையப்படுகிறது. உலோக புரோமைடிலிருந்து அசிட்டோநைட்ரைல் அணைவுச் சேர்மங்களை தயாரித்தல் ஓர் உதாரணமாகும். குறிப்பாக அசிட்டோநைட்ரைல் கரைசலில் இவ்வினை நடைபெறுகிறது:[1].

AgPF6 + Re(CO)5Br + CH3CN → AgBr + [Re(CO)5(CH3CN)]PF6

AgPF6 வெள்ளியை ஓர் உடன் விளைபொருளாக உருவாக்கும் ஆக்சிசனேற்றியாக வெள்ளி எக்சாபுளோரோபாசுப்பேட்டால் செயல்படமுடியும். உதாரணமாக டைகுளோரோமெத்தேன் கரைசலில் உள்ள பெரோசின் பெரோசினியம்யெக்சாபுளோரோபாசுப்பேட்டாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.

AgPF6 + Fe(C5H5)2 → Ag + [Fe(C5H5)2]PF6 (ஆற்றல் = 0.65 V)

தொடர்புடைய வினைப்பொருள்கள் தொகு

பண்புகள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் வெள்ளி டெட்ராபுளோரோபோரேட்டும் (AgBF4) எக்சாபுளோரோ ஆண்டிமோனேட்டும் (AgSbF6) வெள்ளி எக்சாபுளோரோபாசுப்பேட்டை (AgPF6.) ஒத்த வினைப்பொருட்களாகக் கருதப்படுகின்றன.

வெள்ளி நைட்ரேட்டுடன் ஒப்பீடு தொகு

வெள்ளி நைட்ரேட்டு ஒரு பாரம்பரியமான மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஆலைடு மைய வினைப்பொருளாகும். ஆலைடுகளைக் கண்டறிய உதவும் பண்பறி பகுப்பாய்வுகளில் இது பரவலாகப் பயன்படுகிறது. AgPF6 சேர்மத்துடன் தொடர்புடைய சேர்மமாகக் காணப்பட்டாலும் அது வலிமை குறைந்த காரங்களில் சிறிதளவே கரைகிறது. நைட்ரேட்டு எதிர்மின் அயனி ஒரு இலூயிசு காரமாகும். வலிமையாக இடையூறு செய்யும் ஈந்தணைவியை வழங்கி இது கடுமையான பயன்பாடுகளில் செயற்படுதலைத் தவிர்க்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Connelly, N. G.; Geiger, W. E. (1996). "Chemical Redox Agents for Organometallic Chemistry". Chem. Rev. 96: 877–922. doi:10.1021/cr940053x. பப்மெட்:11848774.