வெள்ளி ஐப்போநைட்ரைட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளி ஐப்போநைட்ரைட்டு (Silver hyponitrite) Ag2N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். (Ag+)2[ON=NO]2− என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். ஒற்றை இணைதிற வெள்ளி நேர்மின் அயனியும் ஐப்போநைட்ரைட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இது ஒரு பிரகாசமான மஞ்சள் நிறத் திடப்பொருளாகும். நடைமுறையில் இது நீரில் கரையாது. இருமெத்தில் பார்மமைடு, டைமெத்தில் சல்பாக்சைடு உள்ளிட்ட பெரும்பாலான கரிம கரைப்பான்களிலும் இது கரையாது.[1][2][3]

வெள்ளி ஐப்போநைட்ரைட்டு
Silver hyponitrite
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளி(I) ஐப்போநைட்ரைட்டு, அர்ச்சண்டசு ஐப்போநைட்ரைட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 66738928 Y
InChI
  • InChI=1S/2Ag.H2N2O2/c;;3-1-2-4/h;;(H,1,4)(H,2,3)/q2*+1;/p-2
    Key: WFHLUHLBCCOOIU-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129635977
  • N(=N[O-])[O-].[Ag+].[Ag+]
பண்புகள்
Ag2N2O2
வாய்ப்பாட்டு எடை 275.75
தோற்றம் பிரகாசமான மஞ்சள் நிறத் திண்மம்[1]
அடர்த்தி 5.75 கி/செ.மீ3 (30 °செல்சியசு)
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வெள்ளி ஐப்போநைட்ரைட்டு 1948 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.[4]

தண்ணீரில் கரைக்கப்பட்ட சோடியம் ஐப்போநைட்ரைட்டுடன் வெள்ளி நைட்ரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து வெள்ளி ஐப்போநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது.

Na2N2O2 + 2AgNO3 → Ag2N2O2 + 2 NaNO3

அதிகப்படியான வெள்ளி நைட்ரேட்டு பழுப்பு அல்லது கருப்பு நிற வீழ்படிவை அளிக்கிறது.[1][2]

வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் இரசக்கலவையச் சேர்த்து வினைபுரியச் செய்தும் வெள்ளி ஐப்போநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது.[5]

பண்புகள்

தொகு

செறிவூட்டப்பட்ட கார ஐப்போநைட்ரைட்டு கரைசல்களில் வெள்ளி ஐப்போநைட்ரைட்டு குறைவாக கரையும். [(NH3)2Ag]+ என்ற ஒருங்கிணைவு அயனி உருவாகும் காரணத்தால் நீரிய அமோனியாவில் இது நன்றாகக் கரையும்.[6] ஒளியில் வெளிப்படும்போது வெள்ளி ஐப்போநைட்ரைட்டு மெல்ல சிதைவடைகிறது.[5]

வினைகள்

தொகு

நீரற்ற வெள்ளி ஐப்போநைட்ரைட்டு வெற்றிடத்தில் 158 °செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது. சிதைவின் போது வெள்ளி ஆக்சைடும் நைட்ரசு ஆக்சைடும் உருவாகின்றன. இருப்பினும், இவை பின்னர் நைட்ரசன், வெள்ளி உலோகம் மற்றும் இரு தனிமங்களின் பல்வேறு ஆக்சைடுகள் மற்றும் வெள்ளி உப்புகளின் மாறுபட்ட சேர்மங்களை உருவாக்குகின்றன.[1]

ஐப்போநைட்ரசு அமிலம்

தொகு

ஈதரில் கரைந்த நீரற்ற ஐதரசன் குளோரைடுடன் வெள்ளி ஐப்போநைட்ரைட்டு வினை புரிவதால் ஐப்போநைட்ரசு அமிலம் உருவாகிறது. இதுவே ஐப்போநைட்ரசு அமிலத்தை தயாரிப்பதற்கான நிலையான வழியாகும்:

Ag2N2O2 + 2 HCl → H2N2O2 + 2 AgCl

நிறமாலையியல் தரவு, விளைந்த அமிலத்திற்கான மறுபக்க உள்ளமைவைக் குறிக்கிறது.[7]

ஆல்க்கைல் ஆலைடுகளுடன் வினை

தொகு

வெள்ளி ஐப்போநைட்ரைட்டு ஆல்க்கைல் ஆலைடுகளுடன் வினைபுரிந்து, ஆல்க்கைல் ஐப்போநைட்ரைட்டுகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, மெத்தில் புரோமைடுடனான வினையில் தன்னிச்சையாக வெடிக்கும் இருமெத்தில் ஐப்போநைட்ரைட்டை அளிக்கிறது:[2]

2CH3Br + Ag2N2O2 → H3C-O-N=N-O-CH3 + 2 AgBr

எத்தில்[8],பென்சைல்[9][10][11], மூவிணைய பியூட்டைல்[12][13][14] ஐப்போநைட்ரைட்டுகளும் அறியப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Trambaklal Mohanlal Oza, Rajnikant Hariprasad Thaker (1955), "The Thermal Decomposition of Silver Hyponitrite". Journal of the American Chemical society, volume 77, issue 19, pages 4976–4980. எஆசு:10.1021/ja01624a007
  2. 2.0 2.1 2.2 G. David Mendenhall (1974), "Convenient synthesis of silver hyponitrite". Journal of the American Chemical society, volume 96, issue 15, page 5000. எஆசு:10.1021/ja00822a054
  3. Wiberg, Egon; Holleman, Arnold Frederick (2001). Inorganic Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  4. (1848), "On the formation of hyponitrite of silver". Philosophical Magazine Series 3, XIII. Intelligence and miscellaneous articles, volume 33 (1848), issue 219, page 75. எஆசு:10.1080/14786444808646049
  5. 5.0 5.1 Masatsugu Sekiguchi, Michio Kobayashi, Hiroshi Minato (1974), "Reactions between Acyl Halides and Silver Hyponitrite". Bulletin of the Chemical Society of Japan, volume 45, issue 9, pages 2932-2934. எஆசு:10.1246/bcsj.45.2932
  6. C.N. Polydoropoulos, Th. Yannakopoulos (1961), "Silver hyponitrite: Solubility product and complexes in aqueous ammonia". Journal of Inorganic and Nuclear Chemistry, volume 19, issues 1–2, pages 107–114. எஆசு:10.1016/0022-1902(61)80053-5
  7. Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 15: The group 15 elements". Inorganic Chemistry (3rd ed.). Pearson. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-175553-6.
  8. J. R. Partington and C. C. Shah (1932), J. Chem. Soc., page 2589.
  9. Ho, S. K.; de Sousa, J. B. (1961). "347. Alkoxy-radicals. Part I. The kinetics of thermal decomposition of dibenzyl hyponitrite in solution". Journal of the Chemical Society (Resumed): 1788. doi:10.1039/JR9610001788. 
  10. J. B. Sousa and S. K. Ho (1960), Nature, volume 186, page 776.
  11. Ray, N. H. (1 January 1960). "794. The rates of decomposition of free-radical polymerisation-catalysts: measurements of short half-lives by a thermal method". Journal of the Chemical Society (Resumed): 4023–4028. doi:10.1039/JR9600004023. 
  12. H. Kiefer and T. G. Traylor (1966), Tetrahedron Lett., page 6163.
  13. Huang, R. L.; Lee, Tong-Wai; Ong, S. H. (1 January 1969). "Reactions of the α-methoxybenzyl radical in carbon tetrachloride and in other solvents. Carbon tetrachloride as a chlorinating agent". Journal of the Chemical Society C: Organic (1): 40–44. doi:10.1039/J39690000040. 
  14. R. C. Neuman and R. J. Bussey (1970), J. Am. Chem. Soc., volume 92, page 2440.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_ஐப்போநைட்ரைட்டு&oldid=4113656" இலிருந்து மீள்விக்கப்பட்டது