வெள்ளி குளோரைட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளி குளோரைட்டு (Silver chlorite) என்பது AgClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலேசான மஞ்சள் நிறத்தில் அதிர்ச்சி உணரியாகக் காணப்படும் இச்சேர்மம் செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது

வெள்ளி குளோரைட்டு
Silver chlorite
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி குளோரைட்டு
வேறு பெயர்கள்
  • வெள்ளி(I) குளோரைட்டு
இனங்காட்டிகள்
7783-91-7 Y
ChemSpider 8031311
InChI
  • InChI=1S/Ag.ClHO2/c;2-1-3/h;(H,2,3)/q+1;/p-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9855611
SMILES
  • [O-]Cl=O.[Ag+]
பண்புகள்
AgClO2
வாய்ப்பாட்டு எடை 175.32 கி/மோல்
தோற்றம் இலேசான மஞ்சள் நிறத் திண்மம்
உருகுநிலை 156 °C (313 °F; 429 K)[2] (சிதையும்)
0.45 கி/100மி.லி[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.1[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pcca
Lattice constant a = 6.075 Å, b = 6.689 Å, c = 6.123 Å
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
0.0 கிலோகலோரி/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
32.16 கலோரி/டிகிரி[3]
வெப்பக் கொண்மை, C 20.81 கலோரி/டிகிரி[3]
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS01
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வெள்ளி குளோரேட்டு
வெள்ளி பெர்குளோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் குளோரைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் குளோரைட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெள்ளி குளோரைட்டு உருவாகிறது:[4]

AgNO3 + NaClO2 → AgClO2 + NaNO3

வினைகள் தொகு

சாதாரணமாக சூடுபடுத்தப்படும்போது வெள்ளி குளோரைட்டு 105 ° செல்சியசு வெப்பநிலையில் வெடிக்கும்:[2]

AgClO2 → AgCl + O2

மிக கவனமுடன் சூடுபடுத்தப்படும்போது 156° செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து வெள்ளி குளோரைடாக மாறுகிறது. குளோரசு அமிலம் முன்னிலையில் சிதைவடையும்போது வெள்ளி குளோரேட்டு கிடைக்கிறது.[2]

வெள்ளி குளோரைட்டு கந்தகம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற பல்வேறு பொருட்களுடன் வினைபுரியும்போது வெடிப்பு வினையுடன் வெள்ளி குளோரைடை உருவாக்குகிறது. கந்தக டை ஆக்சைடால் இது ஒடுக்கப்படுகிறது. கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து குளோரின் டை ஆக்சைடை உருவாக்குகிறது.[5] அயோடோமெத்தேன் மற்றும் அயோடோயெத்தேன் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும்போதே வெள்ளி குளோரைட்டு வெடிக்கிறது.[6]

வெள்ளி குளோரைட்டு அணைவுச்சேர்மங்கள் தொகு

நீரற்ற அமோனியாவுடன் வெள்ளி குளோரைட்டு வினைபுரிந்து மூவமோனியா-வெள்ளி குளோரைட்டு என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது:[5]

AgClO2 + 3NH3 → 3NH3·AgClO2

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 A. G. Massey; N. R. Thompson; B. F. G. Johnson (2016) (in English) (Ebook). The Chemistry of Copper, Silver and Gold. Pergamon International Library of Science, Technology, Engineering and Social Studies: Elsevier Science. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781483181691. https://www.google.com/books/edition/The_Chemistry_of_Copper_Silver_and_Gold/GuxPDAAAQBAJ?hl=en&gbpv=0. 
  2. 2.0 2.1 2.2 2.3 F. Solymosi (1968). "The Thermal Stability and Some Physical Properties of Silver Chlorite, Chlorate and Perchlorate*" (in English). Zeitschrift für Physikalische Chemie (Oldenbourg Wissenschaftsverlag) 57 (1): 1–18. doi:10.1524/zpch.1968.57.1_2.001. 
  3. 3.0 3.1 Wendell V. Smith; Kenneth S. Pitzer; Wendell M. Latimer (1937). "Silver Chlorite: Its Heat Capacity from 15 to 300°K., Free Energy and Heat of Solution and Entropy. The Entropy of Chlorite Ion" (in English). J. Am. Chem. Soc. 59 (12): 2640–2642. doi:10.1021/ja01291a046. 
  4. J. Cooper; R. E. Marsh. "On the structure of AgClO2" (in English). Acta Crystallogr. 14: 202–203. doi:10.1107/S0365110X61000693. 
  5. 5.0 5.1 Joseph William Mellor (1922) (in English). Supplement to Mellor's Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry: suppl. 3. K, Rb, Cs, Fr. University of Illinois at Urbana-Champaign: Longmans, Green and Company. பக். 284. 
  6. Urben, Peter, தொகுப்பாசிரியர் (2013) (in English). Bretherick's Handbook of Reactive Chemical Hazards. Elsevier Science. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080523408. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_குளோரைட்டு&oldid=3385964" இலிருந்து மீள்விக்கப்பட்டது