வெள்ளி டங்சுடேட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளி டங்சுடேட்டு (Silver tungstate) Ag2WO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ஒளி ஒளிர்வு, பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை, ஓசோன் வாயு உணரிகள் மற்றும் ஈரப்பத உணரிகள் போன்ற பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[2][3] மின்னணு மற்றும் இரசாயனத் தொழில்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் பேரளவு புரதக்கல்வி ஆராய்ச்சியிலும் வெள்ளி டங்சுடேட்டு பயன்படுத்தப்படுகிறது.[4]

வெள்ளி டங்சுடேட்டு
Silver tungstate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருவெள்ளி; ஈராக்சிடோ(ஈராக்சோ)தங்குதன்
இனங்காட்டிகள்
13465-93-5 Y
ChemSpider 10790108
EC number 236-708-3
InChI
  • InChI=1S/2Ag.4O.W/q2*+1;;;2*-1;
    Key: QEKREONBSFPWTQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22045798
  • [O-][W](=O)(=O)[O-].[Ag+].[Ag+]
பண்புகள்
Ag2WO4
வாய்ப்பாட்டு எடை 463.57 கி மோல்−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தோற்றம்

தொகு

வெள்ளி டங்சுடேட்டு மூன்று பல்லுருவத் தோற்றங்களில் உருவாகிறது.[2] நேர்சாய்சதுரம் (α), அறுகோணம் (β) மற்றும் கனசதுரம் (γ) என்பவை அம்மூன்று நிலைகளாகும். α-வெள்ளி டங்சுடேட்டு வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையானதாக உள்ளது. அதே சமயம் β- மற்றும் γ- வெள்ளி டங்சுடேட்டுகள் சிற்றுறுதி நிலையில் உள்ளன.[5]

தயாரிப்பு

தொகு

வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் டங்சுடேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெள்ளி டங்சுடேட்டு உற்பத்தியாகிறது. சோடியம் நைட்ரேட்டு ஓர் உடன்விளைபொருளாக கிடைக்கிறது:[2]

 

மேற்கோள்கள்

தொகு
  1. "C&L Inventory". echa.europa.eu.
  2. 2.0 2.1 2.2 Sreedevi, A.; Priyanka, K. P.; Babitha, K. K.; Aloysius Sabu, N.; Anu, T. S.; Varghese, T. (2015-09-01). "Chemical synthesis, structural characterization and optical properties of nanophase α-Ag2WO4" (in en). Indian Journal of Physics 89 (9): 889–897. doi:10.1007/s12648-015-0664-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-9845. Bibcode: 2015InJPh..89..889S. https://doi.org/10.1007/s12648-015-0664-1. 
  3. De Santana, Yuri V. B.; Gomes, José Ernane Cardoso; Matos, Leandro; Cruvinel, Guilherme Henrique; Perrin, André; Perrin, Christiane; Andrès, Juan; Varela, José A. et al. (2014-01-01). "Silver Molybdate and Silver Tungstate Nanocomposites with Enhanced Photoluminescence" (in en). Nanomaterials and Nanotechnology 4: 22. doi:10.5772/58923. பன்னாட்டுத் தர தொடர் எண்:1847-9804. http://journals.sagepub.com/doi/10.5772/58923. 
  4. "13465-93-5 - Silver tungsten oxide, 99% (metals basis) - Silver tungstate - 39661 - Alfa Aesar". www.alfa.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  5. Alvarez Roca, Roman; Lemos, Pablo S.; Gracia, Lourdes; Andrés, Juan; Longo, Elson (2016-10-03). "Uncovering the metastable γ-Ag2WO4 phase: a joint experimental and theoretical study". RSC Advances 7 (10): 5610–5620. doi:10.1039/C6RA24692C. Bibcode: 2017RSCAd...7.5610R. https://pubs.rsc.org/en/content/articlepdf/2017/ra/c6ra24692c. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_டங்சுடேட்டு&oldid=3775358" இலிருந்து மீள்விக்கப்பட்டது