வெள்ளி தெலூரைடு

வெள்ளி தெலூரைடு (Silver telluride) என்பது Ag2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளியினுடைய தெலூரைடு சேர்மமான இச்சேர்மத்தை இருவெள்ளி தெலூரைடு அல்லது வெள்ளி (I) தெலூரைடு என்றும் அழைக்கிறார்கள். இச்சேர்மம் ஒற்றைச் சரிவு படிக வடிவில் படிகமாகிறது. பெரும்பாலும் இச்சேர்மம் வெள்ளி(II) தெலூரைடு அல்லது Ag5Te என்ற சிற்றுறுதி சேர்மத்தைக் குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளி தெலூரைடு
Silver telluride
பெயர்கள்
வேறு பெயர்கள்
இனங்காட்டிகள்
12002-99-2 Y
பப்கெம் 6914515
பண்புகள்
Ag2Te
வாய்ப்பாட்டு எடை 341.3364 g/mol
தோற்றம் சாமபல் மற்றும் கருப்பு நிற படிகம்
அடர்த்தி 8.318 கி/செ.மீ³
உருகுநிலை 955 °C (1,751 °F; 1,228 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 3.4
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mP12
புறவெளித் தொகுதி P21/c, No. 14
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வெள்ளி I) தெலூரைடு சேர்ம்ம் பெரும்பாலும் இயற்கையில் எச்சைட் என்ற கனிமமாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் வெள்ளி (II) தெலூரைடு எம்பிரசைட் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வெள்ளி தெலூரைடு ஒரு குறைக்கடத்தியாகும். இதை n-வகை மற்றும் p-வகை குறைகடத்திகள் இரண்டிலும் சேர்த்து பயன்படுத்த முடியும். விகிதவியல் முறையில் காணப்படும். Ag2Te n-வகை கடத்தல் பண்பைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தைச் சூடுபடுத்தும் போது இச்சேர்மம் வெள்ளியை இழக்கிறது.

விகிதவியல் அளவுகளில் அமையாத வெள்ளி தெலூரைடு அதிகபட்சமான காந்தத் தடையை வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_தெலூரைடு&oldid=4003353" இலிருந்து மீள்விக்கப்பட்டது