வெள்ளைக் கன்ன ஆலா
வெள்ளைக் கன்ன ஆலா ( White-cheeked tern ) என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தில் உள்ள ஒரு வகை ஆலா ஆகும். இது செங்கடலின் கடற்கரையிலும், ஆப்பிரிக்காவின் கொம்பு முதல் கென்யா வரையிலும், பாரசீக வளைகுடாவிலும், ஈரானிய கடற்கரையிலும் பாக்கித்தான் மற்றும் மேற்கு இந்தியா வரையிலும் காணப்படுகிறன்றன. [2]
வெள்ளைக் கன்ன ஆலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. repressa
|
இருசொற் பெயரீடு | |
Sterna repressa எர்ன்சுட், 1916 |
விளக்கம்
தொகுஇது காகத்தைவிட அளவில் சற்று சிறியது. சுமார் 35 செ.மீ. நீளம் இருக்கும். அலகு கறுப்பு நிறம். அடிப்பகுதி சிவப்பு நிறம். விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.
கோடையில் தலையில் கண்ணுக்கு மேலான முன்னிடமும், உச்சியும் கறுப்பாக இருக்கும். வால்மேல் இறகுகள், வால் இறக்கைகள் ஆகியன சம்பல் நிறத்தில் இருக்கும். கன்னம் மட்டும் வெண்மையாக இருக்கும். மார்பும் வயிறும் ஊதா நிறந் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும்.
குளிர்காலத்தில் தலை வெண்மையாக இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள தூவிகள், பிடரி, கழுத்து ஆகியன சாக்லெட் பழுப்பாக இருக்கும். பின் கழுத்தின் கீழ்ப் பகுதியும் உடலின் அடிப்பகுதியும் வெண்மையாக இருக்கும்.
நடத்தை
தொகுஇந்த இனங்களில் பெரும்பாலானவை வலசை போகும் இயல்புடையவை. இருப்பினும் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள பறவைகள் ஆண்டு முழுவதும் அங்கேயே தங்கி இருக்கும். இவை 10-200 இணைகள் கொண்ட கூட்டமாக இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலா இனங்களின் கலந்திருக்கலாம். [1]
வாழ்விடம்
தொகுஇந்தப் பறவை இனம் வெப்பமண்டல கடற்கரைகள் மற்றும் கடலோரங்களில் உள்ள நீர் நிலைகளில் வாழ்கின்றன. முக்கியமாக இவை தங்கி இருக்கும் தரைப்பகுதி அல்லது பவளப் பாறைகளில் இருந்து 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) சுற்றளவில் உணவு தேடுகின்றன. இவை பாறை, மணல், சரளைக் கற்கள், பவழத் தீவுகள், பாறைகளில் அலையால் குவிக்கப்பட்ட மணல் கொண்ட வெற்றுத் தரை அரிதாகத் தாவரங்கள் நிறைந்த திறந்த வெளியில் ஆழமற்ற பள்ளத்தில் முட்டையிடுகின்றன.
உணவுமுறை
தொகுஇதன் தன் உணவாக முதுகெலும்பிலி, சிறிய மீன்கள் போன்றவற்றைக் கொள்கிறது.
இனப்பெருக்கம்
தொகுஇவை மே முதல் சூன் வரை கடல் பாறைகளின் மீது கடல் அலை குவித்த மணலில் 2 முதல் 5 வரையிலான முட்டைகளையிடுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2019). "Sterna repressa". IUCN Red List of Threatened Species 2019: e.T22694705A154834019. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22694705A154834019.en. https://www.iucnredlist.org/species/22694705/154834019. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Noddies, gulls, terns, auks". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 24 June 2019.