வேங்கடசூரி சுவாமிகள்

(வேங்கட சூரி சுவாமிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேங்கடசூரி சுவாமிகள் (1817-1889) ஒரு பன்மொழிப் புலவரவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தஞ்சை, அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள இராமச்சந்திராபுரம் என்ற ஊரில், வைதீக புரோகிதத்தை தொழிலாக கொண்ட நாராயண சர்மா என்பவருக்கும், தாய் அரங்கநாயகி தேவி அம்மையாருக்கும் பிறந்தார்.

வேங்கடசூரி சுவாமியின் இயற்பெயர் சுப்புராமன். தமது 15ம் அகவையில் நரசிம்மமூர்த்தியின் உபாசகராகி கவி பாடும் திறன் பெற்றார். பின் வாலாசாப்பேட்டை வேங்கடரமண பாகவதரின் சீடராகி கர்நாடக சங்கீதம் மற்றும் ஹடயோகம் பயின்றார். சமசுகிருதம், தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் தமிழ் முதலிய மொழிகளிலும், குலத்தொழிலான வைதீகம் மற்றும் புரோகிதத்திலும் புலமை பெற்றார்.

தமது 21வது அகவையில் இலக்குமிதேவி என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடத்தினார். பரமக்குடியில் ஆறு ஆண்டுகள் வசித்த பின்னர் தஞ்சையில் 25 ஆண்டுகள் வசித்ததால் இவரை தஞ்சாவூர் அய்யான் என்று புகழ் பெற்றார்.

பிற்காலத்தில் மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தங்கி சௌராஷ்டிர மொழியை மேம்படுத்த பள்ளிக்கூடத்தை நடத்தினார். வேங்கடசூரி சுவாமிகள் இரண்டாம் முறை காசிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்புகையில் யமுனை ஆற்றாங்கரையில் தமது 72ம் அகவையில் வைகுண்டப்பதவியை அடைந்தார்.

விருதுகள்

தொகு

தஞ்சை மராத்திய அவையில் சமசுதான பண்டிதராக விளங்கிய வேங்கடாச்சாரியை தர்க்க வாதத்தில் வென்று தமது புலமையை நிலை நாட்டியதால் ‘வேங்கடசூரி’ என்ற பட்டத்தை பெற்று தஞ்சை மன்னரவைப் புலவரானார். ”சூரி” என்றால் மராத்திய மொழியில் ”வென்றவன்” என்றும், சமசுகிருத மொழியில் ”பெரும் புலவர்” என்று பொருள்படும். மேலும் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய ஆராய்ச்சி உறுப்பினர் தகுதி மன்னரால் வழங்கப்பட்டு பெருமை பெற்றார்.

வாழ்நாள் சாதனைகள்

தொகு
  • சௌராட்டிர மொழியில் இசை வடிவில் முழு இராமாயணத்தை பாடி உள்ளார். (இதனை சௌராட்டிர மொழி வளர்ச்சி குழுவினர் 1904ல் தெலுங்கு & தமிழ் மொழியில் வெளியிட்டனர்)
  • தியாகப்பிரம்மம் தியாகராசஜரின் தெலுங்கு மொழி]]யில் இயற்றிய நவுகா சரித்திரம் எனும் இசை நாடக நூலை சமசுகிருதத்த்ல் மொழி பெயர்த்துள்ளார்.
  • சௌராட்டிரமொழியை செம்மைப்படுத்தி புதிய பாட நூல்களை வெளியிட்டார்
  • இதிகாச, புராண உபந்யாசங்களில் தன்னிகரில்லாதவர்.

உசாத்துணைகள்

தொகு
  • சௌராட்டிரர் வரலாறு, கே.ஆர்.சேதுராமன், 2008
  • சௌராட்டிர பிராமணர் சரித்திரம், கே.ஏ.அன்னாசாமி சாத்திரியார், 1914

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கடசூரி_சுவாமிகள்&oldid=3258475" இலிருந்து மீள்விக்கப்பட்டது