வேடர் தட்டக்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

வேடர் தட்டக்கல் (Vedar thattakal) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]

வேடர் தட்டக்கல்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அமைவிடம்

தொகு

வேடர் தட்டக்கலானது தட்டக்கல் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் காவேரிப்பட்டணம்- சந்தூர் சாலையில் சந்தூரில் இருந்து ஐந்து கிலோதீட்டர் தொலைவில் உள்ளது. மற்றோரு பாதையில், கிருஷ்ணகிரி- போச்சம்பள்ளி சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வேலம்பட்டி வழியாக சென்றடையலாம்.

பெருங்கற்காலச் சின்னங்கள்

தொகு

வேடர் தட்டக்கலின் உட்பகுதியிலும், மலையடிவாரக் கிழக்குப் பகுதியிலும், பாண்டவர் குட்டை என்றும் பாண்டுவருவர் ராயலு என்றும் அழைக்கப்படும் இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இவை கல்பதுக்கையுடன் கூடிய கல்வட்டங்கள் என்று வகைப்படுத்தபடுகின்றன. இவை நான்கு பெரிய கற்பலகைகள் ஒன்றையொன்று சேர்த்து நடப்பட்டு அமைக்கபட்டுள்ளன. இந்த கல்பதுக்கைகளின் கிழக்குப் பக்கம் இடுதுளை செதுக்கபட்டுள்ளது. இந்தக் கற்பலகைகள் 0.15 மீட்டர் கனத்துடன், 3.5 மீட்டர் நீளமும், 2.5 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டவையாக உள்ளன. இந்த கல்லறை மிக கனமான மூடுகல்லால் மூடப்பட்டுள்ளது. மூடுகல் 0.40 மீட்டர் தடிமனுள்ளதாக, 3.90 மீட்டர் நீளமும், 2.9 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த மூடு கல்லின் மேற்புறத்தில் சிறிய குழிவடிவங்கள் பலகை முழுவதும் செதுக்கபட்டுள்ளன. இவ்வாறான குழிகள் குருவிநாயனப்பள்ளியில் உள்ள சின்னங்களிலும் காணப்படுகின்றன. வேடர் தட்டக்கலின் கல்பதுக்கைகள் பலவும் மன் அரிப்பால் சேதமுற்றும் வெளியே தெரிபவனாகவும் உள்ளன. இந்த கல் பதுக்கைகளைச் சுற்றி கல்வட்டங்கள் 5 மீட்டர் முதல் 13 மீட்டர் விட்டம் கொண்டவையாக பல அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வட்டங்களாது இயற்கையாக கிடைக்கும் கரடு முரடான உருண்டைக் கற்களைக் கொண்டு அமைக்கபட்டுள்ளன.[2]

இங்கு உள்ள கல்திட்டை ஒன்றில், இடுதுளைக்கு நேர் எதிரே மேற்கு பக்க கற்பலகையின் உட்புறத்தில் வெள்ளை வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டபட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. சீரான குடிநீர் விநியோகம் வேண்டி சாலை மறியல், 25, சூன், 2017, தினமணி
  2. 2.0 2.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். pp. 131–132. {{cite book}}: Check date values in: |year= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடர்_தட்டக்கல்&oldid=3753307" இலிருந்து மீள்விக்கப்பட்டது