வேட்பேடு
வேட்பேடு அல்லது வேர்ட்பேட் (WordPad) என்பது விண்டோசு 95இலிருந்து அனைத்து மைக்குரோசாபிட்டுப் பதிப்புகளுடனும் உள்ளடக்கப்பட்டு வரும் அடிப்படைச் சொற்செயலி ஆகும்.[1] இது நோட்பேட்டை விட மேம்பட்டதும் மைக்குரோசாபிட்டு வேர்டை விட எளியதுமான மென்பொருள் ஆகும்.[2] மைக்குரோசாபிட்டு இரைட்டிற்குப் பதிலீடாகவே விண்டோசு 95இலிருந்து வேட்பேடு அறிமுகப்படுத்தப்பட்டது.[3]
வேட்பேடு மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம். | |
---|---|
விண்டோசு 7இல் வேட்பேடு | |
Details | |
வகை | சொற்செயலி, உரைத் திருத்தி |
சேர்த்திருக்கும் இயங்கு தளங்கள் | விண்டோசு 95உம் மேற்பட்டவையும் |
முன்வந்தது | மைக்குரோசாபிட்டு இரைட்டு |
Related components | |
நோட்பேடு |
வசதிகள்
தொகுவேட்பேட்டு மென்பொருளில் உரையை வடிவமைக்கவும் அச்சிடவும் முடியும்.[4] ஆனாலும் சொற்றிருத்தி, நிகண்டு, வரிசைப் பட்டியல்களுக்கான ஏற்பு முதலிய வசதிகளை வேட்பேடு கொண்டிருக்கவில்லை.[5] வேட்பேடானது மடல்களையும் சிறு துண்டுகளையும் எழுதுவதற்குப் பொருத்தமானது.[6] ஆனால், வரைகலையிலும் அச்சமைப்பிலும் கூடியளவு தங்கியுள்ள வேலைகளை வேட்பேட்டின் மூலம் வினைத்திறனுடன் செய்ய முடியாது.[7]
வேட்பேடானது வேட்பேட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் உரை வடிவமைப்பை ஏற்றாலும் வேடு 2007இன் உயர் உரை வடிவமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் ஏற்காது.[2]
விண்டோசு 95, விண்டோசு 98, விண்டோசு 2000 ஆகிய இயங்குதளங்களில் வேட்பேட்டு மென்பொருளில் மைக்குரோசாபிட்டின் இரிச்செடிட்டு கண்டுரோலின் பதிப்புகளான 1.0, 2.0, 3.0 ஆகியவை முறையே பயன்படுத்தப்பட்டன.[8] பின்னர், விண்டோசு எட்சு. பி. பணிப் பொதி 1இற்குப் பிறகு வெளிவந்த மைக்குரோசாபிட்டு இயங்குதளங்களில் (விண்டோசு 7 உள்ளடங்கலாக) இரிச்செடிட்டு 4.1ஏ பயன்படுத்தப்படுகின்றது.[8]
விண்டோசு எட்சு. பி. இயங்குதளத்துக்கான வேட்பேட்டில் முழு ஒருங்குறி ஏற்பு இருந்தாலும் அப்பதிப்பு 16-இருமி ஒருங்குறி நிலைமாற்ற வடிவமைப்புப் பெருமுடிவை ஏற்கவில்லை.[9] மேலும் வேட்பேட்டின் முன்னைய பதிப்புகளில் ஆவண வடிவில் கோப்புகளைச் சேமிக்கக் கூடியதாக இருந்தாலும் அப்பதிப்பில் அவ்வாறு சேமிக்க முடியாது (உரை ஆவணமாகவும் உயர் உரை வடிவமைப்பாகவும் மட்டுமே சேமிக்க முடியும்.).[10] பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்டோசு எட்சு. பி. பணிப் பொதி 2இலிருந்து இரைட்டுக் கோப்புகளையும் வேட்பேடு ஏற்பதில்லை.
விண்டோசு எட்சு. பி. கைக் கணினிப் பதிப்பும் விண்டோசு விசிட்டாவும் பேச்சுணரியைக் கொண்டுள்ளன. அவ்வேட்பேட்டுப் பதிப்புகளில் பேச்சின் மூலம் உரையை உள்ளிட முடியும். மேற்கூறிய இயங்குதளப் பதிப்புகளிலும் அவற்றுக்குப் பிந்தைய விண்டோசுப் பதிப்புகளிலும் உள்ள வேட்பேடு மென்பொருள் உரைப் பணிகள் கட்டமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட நீட்டுறு மூன்றாந்தரப்புப் பணிகளை (எ-டு: இலக்கண, சொற்றிருத்தி) ஏற்கின்றது.
பின்னர், வேட்பேட்டின் விண்டோசு விசிட்டாப் பதிப்பானது தவறான மீடருகை, தவறான வடிவமைப்பு முதலிய சிக்கல்களினால் மைக்குரோசாபிட்டு வேட்டு ஆவணக் கோப்புகளை வாசிக்க முடியாதவாறு மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன், வேட்பேட்டில் வேட்டுக் கோப்புகளைத் திறப்பதில் பாதுகாப்பு வழுவொன்று காணப்படுவதாகவும் ஒரு மைக்குரோசாபிட்டுப் பாதுகாப்பறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், பழைய ஆவணங்களையும் (97-2003) புதிய ஆவணங்களையும் (ஆபிசுத் திறந்த நீட்டுறு குறிமொழி) திறப்பதற்கு மைக்குரோசாபிட்டு வேடு வியூவர் என்ற இலவச மென்பொருளைப் பரிந்துரைக்கின்றது. ஆனால், விண்டோசு 7உடன் இணைத்து வழங்கப்படும் வேட்பேடானது வேட்பேட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆபிசுத் திறந்த நீட்டுறு குறிமொழியையும் திறந்த ஆவண உரையையும் ஏற்கின்றது.
விண்டோசு 7இல் மைக்குரோசாபிட்டு, வேட்பேட்டின் வடிவமைப்பை ஆபிசு 2010 பாணி நாடா வரைகலைப் பயனர் இடைமுகமாக மாற்றியுள்ளது.[11] இதன் மூலம் பட்டிப் பட்டையும் கருவிப் பட்டைகளும் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. வேட்பேட்டைப் போலவே விண்டோசுடன் இணைத்து வழங்கப்படும் பெயிண்டு போன்ற செயலிகளும் அவற்றின் இடைமுகத்தில் மாற்றத்தைப் பெற்றுள்ளன.
விண்டோசு 7இன் வேட்பேட்டுப் பதிப்பானது முகப்பு, காட்சி ஆகிய தத்தல்களின் கீழ் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வேட்பேட்டு மென்பொருளில் தொகுத்தலையும் வடிவமைப்பையும் மேற்கொள்ள முடியும்.[12]
- முகப்பு
- நகலகம்
- ஒட்டு
- ஒட்டு
- சிறப்பு ஒட்டு
- வெட்டு
- நகலெடு
- ஒட்டு
- எழுத்துரு
- எழுத்துருக் குடும்பம் (எ-டு: Calibri)
- எழுத்துரு அளவு (எ-டு: 11)
- எழுத்துருவைப் பெரிதாக்கு
- எழுத்துருவைச் சுருக்கு
- தடித்த
- சாய்ந்த
- அடிக்கோடு
- அடித்தம்
- சப்ஸ்கிரிப்ட்
- சூப்பர்ஸ்கிரிப்ட்
- உரை தனிப்படுத்தல் வண்ணம்
- மஞ்சள்
- ஒளிர் பச்சை
- டர்க்கோய்ஸ்
- இளஞ்சிவப்பு
- நீலம்
- சிவப்பு
- அடர் நீலம்
- டீல்
- பச்சை
- ஊதா
- அடர் சிவப்பு
- அடர் மஞ்சள்
- சாம்பல் 50%
- சாம்பல் 25%
- கறுப்பு
- வண்ணம் இல்லை
- உரை வண்ணம்
- தானியங்கு
- வெள்ளை
- வெளிர் சாம்பல்
- நடுத்தர சாம்பல்
- அடர் சாம்பல்
- மரக்கரி
- கறுப்பு
- துடிப்பான சிவப்பு
- துடிப்பான ஆரஞ்சு
- துடிப்பான மஞ்சள்
- துடிப்பான பச்சை
- துடிப்பான நீலம்
- துடிப்பான பர்ப்பிள்
- புரொஃபஷனல் சிவப்பு
- புரொஃபஷனல் ஆரஞ்சு
- புரொஃபஷனல் பச்சை
- புரொஃபஷனல் அக்வா
- புரொஃபஷனல் நீலம்
- புரொஃபஷனல் பர்ப்பிள்
- எர்த்தி சிவப்பு
- எர்த்தி ஆரஞ்சு
- எர்த்தி மஞ்சள்
- எர்த்தி பச்சை
- எர்த்தி நீலம்
- எர்த்தி பழுப்பு
- பாஸ்டில் சிவப்பு
- பாஸ்டில் ஆரஞ்சு
- பாஸ்டில் மஞ்சள்
- பாஸ்டில் பச்சை
- பாஸ்டில் நீலம்
- பாஸ்டில் பர்ப்பிள்
- மேலும் வண்ணங்கள்...
- பத்தி
- ஓர இடத்தைக் குறை
- ஓர இடத்தை அதிகரி
- பட்டியலைத் தொடங்கு
- ஏதுமில்லை
- பொட்டுக்குறி
- எண்ணிடல்
- அகரவரிசை-சிற்றெழுத்து
- அகரவரிசை-பேரெழுத்து
- ரோமன் எண்-சிற்றெழுத்து
- ரோமன் எண்-பேரெழுத்து
- வரி இடைவெளி
- 1
- 1.15
- 1.5
- 2
- பத்திகளுக்கு அடுத்து, 10 புள்ளி இடத்தைச் சேர்
- உரையை இடது சீரமை
- மையப்படுத்து
- உரையை வலது சீரமை
- ஓரச்சீரமை
- பத்தி
- செருகு
- படம்
- படம்
- படத்தை மாற்று
- படத்தை மறு அளவிடு
- பெயின்ட் வரைவியல்
- தேதியும் நேரமும்
- ஆப்ஜெக்டைச் செருகு
- படம்
- திருத்துதல்
- கண்டுபிடி
- மாற்றிடு
- எல்லாம் தேர்ந்தெடு
- நகலகம்
- காட்சி
- பெரிதாக்கு
- இன்னும் பெரிதாக்கு
- இன்னும் சிறிதாக்கு
- 100%
- காண்பி அல்லது மறை
- அளவுகோல்
- நிலைப் பட்டி
- அமைப்புகள்
- சொல் மடிப்பு
- மடிக்க வேண்டாம்
- சாளரத்திற்கேற்ப மடி
- அளவுகோலுக்கு ஏற்ப மடி
- அளவீட்டு அலகுகள்
- அங்குலங்கள்
- சென்டிமீட்டர்கள்
- புள்ளிகள்
- பிகாக்கள்
- சொல் மடிப்பு
- பெரிதாக்கு
வரலாறு
தொகுவேட்பேட்டு மென்பொருளானது முன்னைய விண்டோசுப் பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட மைக்குரோசாபிட்டு இரைட்டுக்கான பதிலீடாக விண்டோசு 95இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், விண்டோசு 95 வெளிவிடப்படுவதற்குச் சிறிது முன்னதாக மைக்குரோசாபிட்டினால் வேட்பேட்டு மென்பொருளுக்கான மூல நிரலும் மைக்குரோசாபிட்டு பவுண்டேசன் கிளாசசு மாதிரிச் செயலியாக மைக்குரோசாபிட்டு பவுண்டேசன் கிளாசசு 3.2உடனும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுடனும் வழங்கப்பட்டது. இப்போதுங்கூட மைக்குரோசாபிட்டு உருவாக்குநர் வலையமைப்பின் இணையத்தளத்திலிருந்து அதனைத் தரவிறக்க முடியும்.
இம்மென்பொருளில் விண்டோசு 95இலிருந்து விண்டோசு விசிட்டா வரை இயல்புநிலை எழுத்துருக் குடும்பமாக ஏரியல் எழுத்துரு அளவு 10இல் பயன்படுத்தப்பட்டது. விண்டோசு 7இலோ இயல்புநிலை எழுத்துருக் குடும்பமாகக் கலிபிரி எழுத்துரு அளவு 11இல் பயன்படுத்தப்படுகின்றது.[13]
வேட்பேட்டை ஒத்த ஒரு மென்பொருள் வேட்பேடு எனும் பெயரிலேயே சில வணிகர்களால் விண்டோசு எம்பெடடு காம்பாக்கிட்டு முன்னிறுவலுடன் வழங்கப்படுகின்றது. அம்மென்பொருளும் திரைப்பலகத்தில் இயங்கும் வேட்பேடு போலவே எளிய செயற்பாட்டைக் கொண்டது. அதனுடைய படவுரு மைக்குரோசாபிட்டு வேட்டின் தொடக்க காலப் படவுருவை ஒத்துள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "வேட்பேட்டைப் பயன்படுத்துதல் (ஆங்கில மொழியில்)". விண்டோசு. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ 2.0 2.1 "வேட்பேடு (ஆங்கில மொழியில்)". கம்பியூட்டர் ஓப்பு. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ அன்கிட்டு (19 செப்டெம்பர் 2010). "மைக்குரோசாபிட்டு இரைட்டு (ஆங்கில மொழியில்)". மை தெக்குப்பேட்சு. Archived from the original on 2010-10-24. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ "வேட்பேட்டில் உரையை வடிவமைத்தல் (ஆங்கில மொழியில்)". விண்டோசு. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ கிரேகு விட்டு. "வேட்பேட்டில் ஒரு விரிதாளை ஆக்குவதற்கான வழிமுறைகள் (ஆங்கில மொழியில்)". ஈகவு. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ அடீல் எலியட்டு. "நோட்பேட்டின் இடத்தை வேட்பேடு எடுக்குமா? (ஆங்கில மொழியில்)". ஈகவு. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ "நோட்பேட்டுக்கும் வேட்பேட்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் (ஆங்கில மொழியில்)". திபரன்சு பிட்டுவீன். பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ 8.0 8.1 "இரிச்சு எடிட்டு கண்டுரோல்களைப் (விண்டோசு) பற்றி (ஆங்கில மொழியில்)". மைக்குரோசாபிட்டு உருவாக்குநர் வலையமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2012.
- ↑ உலோனா ஏ. பிரீசிட்டு (30 நவம்பர் 2009). "ஒருங்குறி ஏற்பின் வேறுபட்ட மட்டங்களுக்கான மென்பொருட்டேவைகள் (ஆங்கில மொழியில்)". அனைத்துலகக் கோடைக் கால மொழியியற் கல்லூரி. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2012.
- ↑ எலிசபெத்து கிரேசு. "வேட்பேட்டை வேட்டாக மாற்றுவது எப்படி? (ஆங்கில மொழியில்)". ஈகவு. பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ["புதிய வேர்ட்பேடுடன் எப்படி வேலை செய்வது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22. புதிய வேர்ட்பேடுடன் எப்படி வேலை செய்வது (ஆங்கில மொழியில்)]
- ↑ வேர்ட்பேடைப் பயன்படுத்துதல் (ஆங்கில மொழியில்)
- ↑ வேர்ட்பேட் (ஆங்கில மொழியில்)