வேணுகோபாலசுவாமி கோயில், புறக்காடு

வேணுகோபாலசுவாமி கோயில், புறக்காடு இந்தியாவில் கேரளாவில் உள்ள உலகின் பழமையான கவுட சாரஸ்வத் கோயில்களில் ஒன்றாகும். இதன் மூலவர் வேணுகோபாலசுவாமி ஆவார். புராதனத் துறைமுக நகரான புறக்காட்டில் அமைந்துள்ள இக்கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். கவுட சாரஸ்வத் பிராமண பக்தர்கள் தம் குழந்தைகளை "தேவக் தீவோப்", "சோடோவோப்" செய்வதற்காக இங்கு அழைத்து வருகிறார்கள். [1]

வரலாறு தொகு

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கோவா, போர்த்துக்கீசியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. போர்ச்சுகீசிய ஆட்சியாளர்கள் பிற மத நம்பிக்கையாளர்களை பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றினர். பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். ஆனால் தம் பாரம்பரியத்தை ரகசியமாக கடைப்பிடித்து வந்தனர். ரோமன் கத்தோலிக்க பிராமணர் என்பது போர்த்துகீசியர்களால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட ஒரு பிரிவாகும். பிராமணர்களின் குழு. கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்காக, கவுடா சாரஸ்வத் பிராமணர்களின் பல குடும்பங்கள் பண்டைய துறைமுக நகரங்களான மங்களூர், கோழிக்கோடு, கொச்சி, புறக்காடு ஆங்கிய இடங்களுக்குக் குடிபெயர்ந்தன. செம்பகச்சேரியின் (அம்பலபுழா) மன்னர் புறக்காட்டில் அவர்களை வரவேற்று, ஒரு சமூகத்தையும் நிர்மாணித்துக்கொள்ளவும், கோயில் கட்டிக்கொள்ள அவர்களுக்கு நிலம் வழங்கியும் உதவினார். [1] 28 ஜனவரி 2011 அன்று புறக்காடு கோவிலில் புனா-பிரதிஷ்டை செய்யப்பட்டது. [2]

கருவறை தொகு

கர்ப்பகிரகம் அல்லது கருவறையில் தான் மூலவர் விக்கிரகம் உள்ளது. இக்கோயிலில் உள்ள கருவறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் தொகு

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Sree Venugopala Devawom". Purakkadsvd.org. Archived from the original on 17 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2012.
  2. Puna-Prathishtta"Purakkad Puna Prathishtta"