வேணுகோபால கிருஷ்ணசுவாமி தேவஸ்தானம்
வேணுகோபாலகிருஷ்ணசுவாமி தேவஸ்தானம், இந்தியாவில் கேரள மாநிலத்தில் சேந்தமங்கலம் என்னுமிடத்தில் உள்ள இந்துக் கோயிலாகும். [1]1900இல் நிறுவப்பட்ட இது வட பரவூரிலிருலுந்து 22 கி.மீ. தொலைவிலும், எர்ணாகுளத்திலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் முந்தைய பெயர் ஜெயந்தமங்கலம் என்பதாகும்.
மூலவர், துணைத்தெய்வங்கள்
தொகுஇதன் மூலவர் வேணுகோபாலகிருஷ்ணசுவாமி ஆவார். அவரே இக்கோயிலின் மூல விக்ரகமாக உள்ளார். இங்கு இறைவனின் உற்சவர் சிலையும் உள்ளது. காலடியில் கருடன், அனுமன் சிலைகள் உள்ளன. இந்தக் கோவிலில் வைசாக் மாதத்தில் ஆறு நாட்கள் ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது.
வரலாறு
தொகுகொச்சியில் குடிய கௌட் சரஸ்வத் பிராமணர்கள் (ஜிஎஸ்பி) கொச்சியில் நாளடைவில் அண்டைய புறநகர் மற்றும் கிராமங்களில் பரவி குடியேற ஆரம்பித்தனர். அவ்வகையில் சில குடும்பங்கள் சேந்தமங்கலத்தில் குடியேறின. கிராமத்தில் வழிபாட்டுத்தலம் இல்லாத நிலையில் அவர்கள் தம்முடைய ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நடந்து வடபரவூரில் உள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையைச் சரிசெய்யும் நோக்கில் அவர்கள் சென்னோத் பரம்பில் ஸ்ரீ தாச பிரபுவின் கீழ் ஒன்றிணைந்து ஒரு கோயிலை நிறுவும் முயற்சிகளைத் தொடங்கினர்.
இதற்காக அவர்கள் பாளையம் ஸ்வரூபத்தைச் சேர்ந்த பாலியத் வலியச்சனை அணுகி உதவி வேண்டினர். அவர் கோயில் கட்ட, நிலத்தை தானமாக வழங்கினார். உள்ளூர்வாசிகளின் தாராள நன்கொடையுடன், கோயில் கட்டப்பட்டு,1900 ஏப்ரல் 30 அன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1920ல் சென்னோத் பரம்பில் ராமச்சந்திர பிரபு தலைமையில் 12 சமூகத்தினர் ஒன்று சேர்ந்து ஒரு சிட்டியைத் தொடங்கினார்கள். அதில் கிடைக்கும் லாபத்தினைக் கொண்டு, கோயிலுக்கான நிலத்தை கையகப்படுத்தினர், தினசரி செலவுக்கும் பயன்படுத்தினர். பின்னர், 1956ல், சென்னோத் பரம்பில் ஸ்ரீதாச பிரபுவின் பிள்ளைகள், அவரது பெயரில், ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, 10 ஏக்கர் நிலத்தையும், ரூ.65,000உம் அதன் சார்பாக வழங்கினர். நாளடைவில் பிற கட்டுமானங்கள் செய்யப்பட்டன. 1995 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, கருவறை செப்புத்தகடுகளால் வேயப்பட்டது.
ஸ்ரீமத் சுதீந்திர தீர்த்த சுவாமிகள் 1973 ஆம் ஆண்டு இக்கோயிலில் சாதுர்மாஸ்ய விருத்தம் செய்தார். தற்போது இப்பகுதியில் சுமார் 100 ஜிஎஸ்பி குடும்பங்கள் உள்ளன.