வேதித் தொழிற்நுட்ப வல்லுநர்

வேதித் தொழிற்நுட்ப வல்லுநர் என்போர் வேதியியல், வேதிப் பொறியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் திறன் பெற்றோரைக் குறிப்பதாகும். இவர்கள் பல்வேறுபட்ட ஆய்வகங்கள் முதல் தொழிலகங்கள் வரை பரந்துபட்ட சூழல்களில் பணியாற்றுபவர் ஆவர். இவர்களின் பணித் திறம் பல முகங்களைக் கொண்டதாக இருப்பதனால் இவர்களின் சிறப்புப் பணிகளைப் பொதுமைப்படுத்துவது இயலாததாகும்.

கோலோங் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆய்வகம்

எரிநெய்வேதித் தொழிலகங்கள், மருந்துத் தொழிலகங்கள் மற்றும் பல வேதித் தொழிற்சாலைகள் இவர்களைப் பணியமர்த்துகின்றன. இவ்வகைத் தொழிலகங்களின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆலோசனை மற்றும் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் இவர்கள் பணிபுரியக்கூடும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Science Technicians". Archived from the original on 2009-08-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  2. "Archived copy". Archived from the original on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)