வேற்சுவல் பொக்சு
விற்சுவல் பாக்ஸ் (Oracle VM VirtualBox) அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் விர்ச்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடாக விண்டோசு இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி லினக்சு, மாக், விண்டோசு, சோலாரிசு போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம். வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. வெற்சுவல் பாக்ஸ் எக்ஸ்86 (X86) வன்பொருள் பயன்படுத்த வல்ல ஒரு பொது பயன் கொண்ட ஒரு முழு மெய்நிகர் மென்பொருள் .பெரும்பாலும் வெற்சுவல் பாக்ஸ் வழங்கியை இலக்காக கொண்டு உள்ளது. டெஸ்க்டாப் மற்றும்பதிகணினி ஆகியவற்றிலும் பயன் படுத்த ஏதுவாக வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
விண்டோசு ஏழிலும், குபுண்டுவிலும் இயங்குகிறது. | |
வடிவமைப்பு | இன்னோடெக் |
---|---|
உருவாக்குனர் | ஆரக்கிள் கார்ப்பரேசன் |
தொடக்க வெளியீடு | சனவரி 15, 2007 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு, மேக் ஓ.எஸ், லினக்ஸ், சொலாரிஸ் [1] |
கோப்பளவு | 40 – 90 மெகாபைட்டு depending on platform[2] |
மென்பொருள் வகைமை | மெய்நிகர் கருவி |
உரிமம் | Base Package: GNU General Public License version 2 (Optionally Common Development and Distribution License |
இணையத்தளம் | www |
பயன்கள்
தொகுஒருமித்த நேரத்தில் பல இயக்குதளம் இயக்கும் திறன்
தொகுஒன்றுக்கு மேற்பட்ட இயக்குதளத்தை நாம் பெரிதும் பயன்படுத்துவது இல்லை.அப்படியே தேவைப்பட்டாலும் நாம் அதனை நமது கணினியில் உள்ள வன்தட்டுநிலைநினைவகத்தில் நிறுவ வேண்டும் அதன் பிறகு தான் அதனை நாம் பயன்படுத்த முடியும். அவ்வாறு அல்லாது பல இயக்குதளங்களை நம்முடைய வன்தட்டுநிலைநினைவகத்தின் ஒரு பகுதியை செயற்கை வன்தட்டுநிலைநினைவகத்தில் (virtual-Harddisk) நிறுவி அதனை பயன் படுத்த தொடங்கலாம் .இதன் மூலம் பல இயக்குதளங்களை நாம் உருவாக்கிய செயற்கை வன்தட்டுநிலைநினைவகத்தில் நிறுவி பயனபடுத்தலாம் .இதனை போலவே நினைவகத்தில் (ram) ஒரு பகுதியை செயற்கை நினைவகமாக மாற்றி பயன்படுத்தலாம் .இதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது நாம் உருவாக்கும் செயற்கை நினைவகம் மற்றும் வன்தட்டுநிலைநினைவகம் மெய்யான நினைவகம் மற்றும் வன்தட்டுநிலைநினைவகம் கொண்டு உள்ள திறனை விட குறைவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஒருமிக்க நேரத்தில் பல இயக்குதளம் இயக்க படுவதால் நாம் அடையும் நன்மைகள்
1)பெரும் அளவில் மின் சிக்கனம் ஏற்படும்
2)வன்பொருள் முதலிட்டில் செலவினம் குறையும்
3)ஒட்டுமொத்த உரிம செலவு குறையும்.
4)பயனர் வேலை வெகுவாக குறைக்க படுகிறது.
பல பழைய இயக்குதளங்களை இப்பொது இருக்கும் புதிய மென்பொருள்கள் ஏற்பது இல்லை ஆனால் அம்மென்பொருள்களை இந்த மெய்நிகர்ப் பெட்டி மூலம் நிறுவி பயன் படுத்தலாம் .இதனால் நாம் புதிய வன்பொருள் பயன்படுத்த தொடங்கிய பின்னரும் பழைய மென்பொருள்களை சுலபமாக பயன்படுத்தலாம்[3] .
எளிதில் மென்பொருள் நிறுவல்
தொகுமென்பொருள் விற்பனையாளர் தங்கள் தயார் செய்யும் மென்பொருள் வன்பொருளில் இட்டு அதனை பயன் படுத்தி அதில் வரும் நற்பயன் தீபயன்கள் கண்டு அவற்றை அடுத்து அடுத்து வரும் புதிய பதிப்புகளை .பயன்படுத்த பல கணினிகள் தேவைப்படுகின்றன. மேலும் பல இயக்குதளங்களில் அவை எவ்வாறு செயல் படுகிறது என்பது அவர்களுக்கு தேவைப்படுகிறது .இத்தருணத்தில் அவர்கள் அதிக பொருட்செலவில்லாமல் ஒரு கணினியில் பல இயக்குதளங்களை நிறுவி அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மெய்நிகர்பெட்டி மூலம் எளிதில் செயல்படுத்தி பார்க்க முடியும்.
மென்பொருள் சோதனை மற்றும் பேரிடர் மேலாண்மை
தொகுமென்பொருள் உருவாக்கிய பிறகு அதன் தரம் ,இயக்கு திறன் முதலிய பல பண்புகள் அதனுடன் குறிப்பிட பட வேண்டும் .அப்படி குறிப்பிட அவை சோதனைக்கு உட்படுத்த பட வேண்டும் .இப்படி சோதனை செய்ய பட வேண்டிய மென்பொருள்களை நிறுவி அதன் பயன்பாட்டை அறிய அதிக பொருட்செலவு அதனை பயன் படுத்தும் இயக்குதளம் நிறுவ செலவாகும் அதனை குறைத்து செயற்கை வன்பொருளை நாம் மென்பொருளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து அதனை பயன் படுத்தலாம் .மேலும் இந்த மெய் நிகர்பெட்டியில் நீங்கள் பயன் படுத்தும் செயற்கை வன்தட்டுநினைவகம் ,நகல்எடுக்கவல்லது ,ஒரு கணினியில் இருந்து மற்றும் ஒரு கணினிக்கு மாற்றவல்லது(porting ).பேரிடர் ஏற்படும் காலத்தில் .நன்கு செயல் பட்ட முன் ஒரு காலத்திற்கு கொண்டு செல்ல வல்லது (restore to previous working state ). இச்செயலை செய்வதின் மூலம் நாம் பேரிடர் ஏற்படும் காலங்களிலும் வெகு விரைவில் நம்மால் மென்பொருள் சேவையை மீண்டும் துவக்க முடியும்
.
மூல இயக்குதளம்
தொகுமூல இயக்குதளம் என்பது நாம் மெய் நிகர் பெட்டியை நிறுவ பயன் படுத்தும் இயக்குதளம் ஆகும். இது மூல வன்தட்டு நினைவகம் (system harddisk) மற்றும் மூல நினைவக (System RAM) துணை கொண்டு இயங்கும். மெய் நிகர் பெட்டியில் ஏற்படும் எந்த மாற்றமும் இந்த வன்தட்டு நினைவகத்தையும் பிற நினைவகங்களை பாதிக்காது.
அதிதி இயக்குதளம்
தொகுஅதிதி இயக்குதளம் என்பது மெய் நிகர் பெட்டியில் நாம் நிறுவும் இயக்குதளம் ஆகும். இது நாம் உருவாக்கும் செயற்கை வன்தட்டு நினைவகம் (system harddisk) மற்றும் மூல நினைவக (System RAM) ஆகியவற்றின் துணை கொண்டு இயங்கும். யுனிவர்சல் சீரியல் பஸ் என்னும் தகவல் மாற்று கருவி, விசைபலகை, சுட்டி, அச்சு இயந்திரம் ஆகிய அனைத்தும் மூல இயக்குதளத்தில் நாம் பயன்படுத்தும் அதே திறன் அளவில் அதிதி இயக்குதளத்திலும் இயங்கும் .மெய்நிகர்பெட்டியில் நாம் பயன்படுத்த நமக்கு இக்கருவிகள் தனியாக தேவை படமாட்டாது. மூல இயக்குதளத்தில் நாம் சேர்க்கும் எந்த ஒரு வன்பொருளும் அதிதி இயக்குதளத்தில் பயன்படுத்த முடியும். மெய் நிகர் பெட்டியை விண்டோஸ், லினக்ஸ், சொலாரிஸ், ஆப்பிள் நிறுவனத்தின் மாகிண்டோஸ் ஆகிய இயக்குதளங்களில் நிறுவலாம்.
பல திரை பகுத்தல்
தொகுசில மென்பொருள் பயன் படுத்தும் பொது நமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகள் தேவைப் படுகிறது. இத்தேவைகளையும் மெய்நிகர்பெட்டி பூர்த்தி செய்கிறது. பயனர்க்கு ஏற்ப பல திரை பகுத்தல் (multiscreen resolution) சேவையை அளிக்கிறது. பல மையச் செயற்பகுதிகளை (central processing unit) உருவாக்கி பயன் படுத்தும் அமைப்பு இதில் அடங்கும்