வேளிர் (ஈழம்)
வேளிர் ஆட்சி தமிழகத்தில் இருந்தது போலவே ஈழத்திலும் இருந்தது. இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூல்கள் மிகச் சில செய்திகளையே கூறினாலும் இலக்கையில் கிடைக்கும் 26 கல்வெட்டுகள் இவர்களை பற்றி நிரம்பவே சான்றுகளை தருகின்றன. இவர்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள் அனைத்தும் பெருங்கற்காலம் சார்ந்த மையங்களிலேயே கிடைப்பதால் இவர்கள் பெருங்கற்காலத்தில் இருந்தே இலங்கையில் வலிமையுடன் இருந்தனர் என்று கூறுவார் ப. புஷ்பரட்ணம் என்னும் இலங்கை ஆய்வாளர்.
கல்வெட்டுகளும் இலக்கியங்களும்
தொகுஇலங்கை கல்வெட்டுகள் ஆய்வுகள் இவர்களை 'வேள்' எனக் குறிப்பிட்டுத் தலைவன் எனப் பொருள்படும் பெயர்களையும், கிராம அதிகாரி, குதிரை மேற்பார்வையாளன் என்ற பொருள் தரும் சொற்களையும் வேள் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றன. மகாவம்சம் இவர்கள் ஆண்ட நாட்டை வெளோசனபதாசு" எனக் குறிப்பிடுகிறது.[1] பூதன்,அதிரன்,உதிரன்,திரையன், திசையன்,ஆரன், போன்ற பெயர்கள் பானை ஓடுகளில் காணப்படுகின்றன.[2]