வைகைச் சமவெளி

வைகைச் சமவெளி என்பது தமிழ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆறுகளில் ஒன்றான வைகை ஆற்றின் சமவெளியில் தொல்லியல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற சமவெளி பகுதிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் பழனி மலைப் பகுதியிலிருந்து பாயும் இந்த வைகைச் சமவெளியில் ஆதி இரும்புக் காலத் தொல்லியல் தலங்கள் பரவிக் காணப்படுகின்றன எனவும், தமிழ்நாட்டில் மிக முற்பட்ட பண்பாட்டு முன்னேற்றங்கள் காணப்பட்ட ஓரிடம் இதுவென்றும் தொல்பொருள் ஆய்வாளரும், வரலாற்றாய்வாளருமான கா. இந்திரபாலா அவர்கள் தனது ஆய்வுகளில் வெளியிட்டுள்ளார் .[1] இந்த வைகைச் சமவெளியின் மேற்குப் பகுதியிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல் தலங்கள் பல காணப்படுகின்றனவாம். அங்கு இடைக் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களாக குறுங்கற் கருவிகள் பல கிடைத்துள்ளன[2]

இரும்புக் காலச் சவ அடக்கங்களும் கல் வட்டங்களும் தொகு

பழனிமலை தொடக்கம் மதுரை வரையுள்ள பகுதியில் இடையிடையே ஆதி இரும்புக் காலத்துக்குரிய சவ அடக்கங்களும், கல் வட்டங்களும் உள்ளன. குறிப்பாக மதுரைப் பகுதியில் ஆதி இரும்புக் காலத்துக்குரிய பல சவ அடக்கங்கள் பல நெருக்கமாக காணப்பட்டன.

பாண்டியரின் தலைநகரம் தொகு

இடைக் கற்கால மற்றும் ஆதி இரும்புக் காலத் தொல்லியல் அகழ்வாய்வுகள் இடம்பெற்ற வைகைச் சமவெளி பகுதிகளில் ஒன்றான, மதுரை பாண்டியரின் தலைநகராக மிக பின்னரான காலப் பகுதியிலேயே மாறியுள்ளது.

சான்றுகள் தொகு

  1. கா. இந்திரபாலா. இலங்கையில் தமிழர்: பக்கம் 94
  2. http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D[தொடர்பிழந்த இணைப்பு] பக்கம் - 94
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகைச்_சமவெளி&oldid=3229509" இலிருந்து மீள்விக்கப்பட்டது