வைக்கிங் திட்டம்

வைக்கிங் திட்டம் (Viking Mission) என்பது செவ்வாய்க் கோளை ஆராய்வதற்கென நாசா நிறுவனம் தயாரித்த ஒரு விண்வெளிப் பயணத் திட்டமாகும். வைக்கிங் 1, வைக்கிங் 2 என இரண்டு விண்கலங்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டன. இதன் மொட்த்தாச் செலவு கிட்டத்தட்ட $1.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆகஸ்ட் 20, 1975 இல் வைக்கிங் 1 ஏவப்படட்து. அதே ஆண்டு செப்டம்பர் 9 இல் வைக்கிங் 2 ஏவப்பட்டது. இரண்டும் "ஒழுக்குச் சிமிழ்" எனப்படும் Orbiter Capsule, மற்றும் "தளச் சிமிழ்" எனப்படும் Lander Capsule ஆகியவற்றைக் கொண்டு சென்றன. இரண்டு விண்வெளிக் கப்பல்களும் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்து பல விபரங்களை வண்ணப் படங்களுடன் பூமிக்கு அனுப்பின.

வைக்கிங் ஒழுக்குச்சிமிழ் (நாசா)
வைக்கிங் 2 அனுப்பிய படம்

வைக்கிங்-1 ஏவிப் பத்து மாதங்களில் செவ்வாய்க் கோளைச் சுற்ற ஆரம்பித்து, ஜூலை 20, 1976 இல் செவ்வாயில் தரையிறங்கியது. அதே நேரம் வைக்கிங் 2 அதே ஆண்டு ஆகஸ்ட் 7 இல் செவ்வாய்க் கோளைச் சுற்றி வர ஆரம்பித்து, செப்டம்பர் 3, 1976 இல் தரையிறங்கியது.

வைக்கிங் திட்ட முடிவு தொகு

இரண்டு வைக்கிங் விண்கலங்களினதும் முடிவுகள் பின்வருமாறு:

கலம் திரும்பி வந்த நாள் மூடப்பட்ட நாள் வாழ்வு காலம் முடிவின் காரணம்
வைக்கிங் 1 ஒழுக்குச்சிமிழ் ஜூன் 19 1976 ஆகஸ்ட் 17 1980 4 ஆண்டுகள், 1 மாதம், 19 நாட்கள் Shut down after depletion of attitude control fuel
வைக்கிங் 1 தளச்சிமிழ் ஜூலை 20 1976 நவம்பர் 13 1982 6 ஆண்டுகள், 3 மாதங்கள், 22 நாட்கள் மனிதத் தவறு
வைக்கிங் 2 ஒழுக்குச்சிமிழ் ஆகஸ்ட் 7 1976 ஜூலை 25 1978 1 ஆண்டு, 11 மாதங்கள், 18 நாட்காள் Shut down after fuel leak in propulsion system
வைக்கிங் 2 தளச்சிமிழ் செப்டம்பர் 3 1976 ஏப்ரல் 11 1980 3 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள் மின்கலத்தில் பழுது

அனைத்து வைக்கிங் திட்டமும் முடிவில் மே 21 1983 இல் கைவிடப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கிங்_திட்டம்&oldid=2220885" இலிருந்து மீள்விக்கப்பட்டது