எம்.கே.கோபிநாதன் நாயர் எனப்படும் இவர், பிரபலமாக வைசாகன் (Vaisakhan) என்று அழைக்கப்படுகிறார். இவர், ஒரு இந்திய சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். மேலும், 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட விபரத்தின் படி, இவர் கேரள சாகித்ய அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்தார் என்று அறியப்படுகிறது. [1] இவரது கதைகள் நடையில் எளிமை மற்றும் கருப்பொருளில் புத்துணர்ச்சி ஆகியவற்றால் அறியப்படுகின்றன. இவரது பல கதைகள் இந்திய ரயில்வேயை பின்னணியாகக் கொண்டுள்ளன.

வைசாகன்
இயற்பெயர்
വൈശാഖൻ
பிறப்புஎம். கே. கோபிநாதன் நாயர்
27 ஜூன் 1940
மூவாற்றுப்புழை, இந்தியா
மொழிமலையாளம்
கல்வி நிலையம்
வகைசிறுகதை, திரைக்கதை

ஆரம்ப வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில்

தொகு

வைசாகன் 1940 இல், கேரள மாநிலத்திலுள்ள மூவாற்றுப்புழையில், கோபிநாதனாக ஏ.வி.கிருஷ்ண குருப் மற்றும் நாராயணி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[2] இவர்,எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி, நிர்மலா கல்லூரி மற்றும் செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். [3]

1964 இல், இவர் தென்னக இரயில்வேயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 20 வருட சேவைக்குப் பிறகு, வைசாகன் முழுநேர எழுத்துத் தொழிலைத் தொடர்வதற்காக விருப்ப ஓய்வு பெற்றார். [2]

இவரது மனைவியின் பெயர் பத்மா. இவர்களுக்கு பிரவீன், பிரதீப், பூர்ணிமா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். 1998இல் இவரது மனைவி காலமானார். தற்போது, இவர், திருச்சூர் மாவட்டத்திலுள்ள பரவட்டானியில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தொகு

வைசாகனின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு நூல்பலம் கடக்குன்னவர் ஆகும். இது, பல விருதுகளையும் விமர்சனப் பாராட்டையும் பெற்ற கதையாக உள்ளது. இவரது வெளியிடப்பட்ட பிற புத்தகங்கள் பின்வருமாறு: [4]

சிறுகதைத் தொகுப்பு

தொகு
  • அப்பீல் அன்யாயபாகம்
  • அதிருகலிலாதி [5]
  • அகாலத்தில் வசந்தம் [6]
  • பொம்மிடிப்பூண்டியில் பாலம் [5]
  • யமகம் [5]
  • கதைகள்
  • பிரியப்பட்ட கதைகள்
  • சைலன்சர்

குழந்தைகள் இலக்கியம்

தொகு
  • மீன் காய்குன்ன மரம்
  • கதைகளுடெ அற்புதலோகம்

நினைவுகள்

தொகு
  • வைசாகன்டெ ஜீவித சிந்தங்கள்
  • ஒரு மனசின்டெ ராசதந்திரம்
  • ஓர்மாயூடெ சூட்டுவெட்டம்
  • ஒர்மயூடெ பழங்களில் பதினஞ்சு ஸ்திரீகள்

முக்கிய விருதுகள்

தொகு
  • 1989: கதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருது – நூல்பாலம் கடக்குன்னவர்
  • 1992: செருகாட் விருது – நூல்பாலம் கடக்குன்னவர் [7]
  • 1993: அபுதாபி சக்தி விருது
  • 2010: மூக்கஞ்சேரில் செரியன் ஜோசப் விருது [8]
  • 2010: கமலா சுரய்யா விருது – சைலன்சர் (சிறுகதைத் தொகுப்பு)
  • 2013: அயனம் - சி.வி.ஸ்ரீராமன் கதா புரஸ்காரம் [9]
  • 2017: பேராசிரியர். ஜோசப் முண்டாசேரி விருது
  • 2021: கேரள சாகித்ய அகாடமி பெல்லோஷிப் [10]

வகித்த பதவிகள்

தொகு
  • தலைவர், கேரள சாகித்ய அகாடமி (ஆகஸ்ட் 2016 - தற்போது) [11]
  • தலைவர், புரோகமன கலா சாகித்ய சங்கம் (2013–2018)
  • உறுப்பினர், துஞ்சன் சமாரக சமிதி (- தற்போது)
  • முன்னாள் தலைவர், குஞ்சன் நம்பியார் சமாரகம் - கிள்ளிக்குறிச்சிமங்கலம் [12]
  • முன்னாள் ஆலோசகர், சாகித்திய அகாதமி
  • முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள சாகித்ய அகாதமி


சான்றுகள்

தொகு
  1. "KERALA SAHITYA AKADEMI - About". பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
  2. 2.0 2.1 tommattam (2011-01-05), Interview with Vaisakhan-writer-Mattathil Thodupuzha., பார்க்கப்பட்ட நாள் 2016-12-07
  3. "A special get-together at Maharaja's college". 17 December 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/a-special-gettogether-at-maharajas-college/article3034932.ece. 
  4. "കെ.പി.എ.സി. ലളിത സംഗീതനാടക അക്കാദമി അധ്യക്ഷ". http://www.big14news.com/8404/kpac-lalitha/. 
  5. 5.0 5.1 5.2 "Centralized OPAC Catalog › VAISAKHAN". central.tnopac.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. AKALATHIL VASANTHAM - Koha Online Catalog.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Cherukad Award". பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
  8. "KOCHI TODAY". 28 November 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/KOCHI-TODAY/article15719166.ece. 
  9. "Award presentation". 12 January 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/youth-dies-in-bike-accident/article5569325.ece. 
  10. "State Sahitya Akademi fellowships for Vaisakhan, K.P. Sankaran". 27 July 2022. https://www.thehindu.com/news/national/kerala/state-sahitya-akademi-fellowships-for-vaisakhan-kp-sankaran/article65689827.ece. 
  11. Praveen, S.R. (31 July 2016). "Vaisakhan to head Sahitya Akademi". http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/Vaisakhan-to-head-Sahitya-Akademi/article14518017.ece. 
  12. "Kuncham Nambiar Smarakam - Killikurissimangalam". www.kunchannambiarsmarakam.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாகன்&oldid=4110073" இலிருந்து மீள்விக்கப்பட்டது