வைத்தியலிங்கம் கோயில்

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

ஸ்ரீஅன்னை யோகாம்பிகை வைத்தியலிங்கசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் நல்லூர் புறநகர்ப் பகுதியின் ஆலடிப்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

வைத்தியலிங்கம் கோயில்
வைத்தியலிங்கம் கோயில் is located in தமிழ் நாடு
வைத்தியலிங்கம் கோயில்
வைத்தியலிங்கம் கோயில்
வைத்தியலிங்க சுவாமி கோயில், ஆலடிப்பட்டி, நல்லூர், தென்காசி, தமிழ்நாடு 
ஆள்கூறுகள்:8°52′16″N 77°31′01″E / 8.8711°N 77.5169°E / 8.8711; 77.5169
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி மாவட்டம்
அமைவிடம்:ஆலடிப்பட்டி, நல்லூர்
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
ஏற்றம்:171 m (561 அடி)
கோயில் தகவல்
மூலவர்: வைத்தியலிங்க சுவாமி
தாயார்:யோகாம்பிகை
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:ஆவணி திருவிழா,
பங்குனி திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

இக்கோயிலின் கருவறையில் வைத்தியலிங்க சுவாமி மற்றும் தாயார் யோகாம்பிகை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

சுடலை மாடசாமி மற்றும் கருப்பண்ணசாமி தெய்வங்கள் பல்வேறு சாதியின மக்களால் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர்.

குல தெய்வம் தொகு

ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமியை இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.

வழி தொகு

திருநெல்வேலி - ஆலங்குளம் (Alangulam) - 30 கி.மீ.

ஆலங்குளம் (Alangulam) - ஆலடிப்பட்டி (Aladipatti) - 3 கி.மீ.

திருவிழாக்கள் தொகு

திருவிழா ஓராண்டிற்கு இரு முறை நடத்தப்படுகிறது. ஆவணி திருவிழா[1] மற்றும் பங்குனி (தமிழ் மாதம்) மாதத்தில் 10 நாள் திருவிழாவாக  ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி மற்றும் யோகாம்பிகைக்கு திருவிழா நடத்தப்படுகிறது .இதில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.ஆனிதிருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு ஸ்ரீஆனந்த நடராஜாரக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் கோபுர தீபாராதனை காட்டபடுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. தினத்தந்தி (2023-08-21). "வைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைத்தியலிங்கம்_கோயில்&oldid=3938859" இலிருந்து மீள்விக்கப்பட்டது