வைரக்கண்ணு மாளுசுத்தியார்
வைரக்கண்ணு மாளுசுத்தியார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் அமைந்த சாக்கோட்டை கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை வாசு மாளுசுத்தியார் ஆவார்.
இந்திய விடுதலைப் போராட்டம்
தொகுமார்ச் 1942 கிரிப்சின் தூதுக்குழு செயற்குழு பிரிட்டிஷ் அரசின் வரைவு பிரகடனத்தை பற்றி விவாதிக்க தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி அந்த வரைவு பிரகடனத்தை நிராகரித்தது. கிரிப்சு தூதுக்குழு முயற்சி தோல்வியடைந்த பின்னர் காங்கிரசு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. இது ஆகத்து புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த நாச்சியார்கோயில் அருகே ஆகத்து புரட்சியின் காரணமாக ஒரு பாலம் வெடி வைத்து உடைக்கப்பட்டது. அதில் வைரக்கண்ணு மாளுசுத்தியார் நாச்சியார்கோயில் பாலம் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதில் இவருக்கு துணையாக இருந்த எஸ். நாராயணா மாளுசுத்தியார் மகன் ரத்தினசாமி மாளுசுத்தியார் மற்றொரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பின்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வைரக்கண்ணு மாளுசுத்தியார் ஆங்கிலேய அரசால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.
- ↑ Thanjavur Mavattam.
- ↑ Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.