ஷரோன் ரெட் (அக்டோபர் 19, 1945 - மே 1, 1992)[2][3]நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த ஒரு அமெரிக்கப் பாடகர் ஆவார். அவர் பென்னி போர்டு எனும் பாடகரின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்.[4]

ஷரோன் ரெட்
பிறப்பு(1945-10-19)அக்டோபர் 19, 1945
நார்ஃபோல்க்விர்ஜீனியா, அமெரிக்கா
பிறப்பிடம்நியூயார்க், அமெரிக்கா
இறப்புமே 1, 1992(1992-05-01) (அகவை 46)
இசை வடிவங்கள்ரிதம் அண்ட் ப்ளூ, டிஸ்கோ[1]
தொழில்(கள்)பாடகர் - நடிகர்
இசைக்கருவி(கள்)குறலிசை
இசைத்துறையில்1967–1992

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

ரெட் அக்டோபர் 19, 1945 அன்று வர்ஜீனியாவின் நோர்போக்கில் ஜீன் மற்றும் கேத்ரின் ரெட் ஆகியோருக்குப் பிறந்தார். ஜீன் ரெட் கிங் பதிவகத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருந்தார். மேலும் அவரது மாற்றாந் தகப்பன் பென்னி குட்மேனின் இசைக்குழுவுடன் இணைந்து இசைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். அவரது சகோதரர் ஜீன் ரெட் ஜூனியர் , கூல் அண்ட் தி கேங் மற்றும் பிஎம்பி இசைக்குழுவின் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரி பென்னி போர்டு இரண்டு தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்ட பாடகியாவார்.

1968 ஆம் ஆண்டில் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்திற்காக நான்கு தனிப்பாடல்களுடன் அவர் தனது பாடல் பதிவு வாழ்க்கையைத் தொடங்கினார். இவை நான்குமே பாடலாசிரியரும் இசைப்பதிவு தயாரிப்பாளருமான பாபி சுஸரால் தயாரிக்கப்பட்டது. ஹாங்க் வில்லியம்ஸ் பாடலான " ஹாஃப் அஸ் மச் " ஐ ரெட்டின் முதல் தனிப்பாடலாக சுசர் தேர்ந்தெடுத்தார். சுஸ்ஸரின் பேஸ் வகை இசைக்கு எதிராக ரெட்டின் குரல்கள், அவரது இருப்பை ரிதம் அண்ட் ப்ளூ வானொலி நிலையங்களுக்கு மிக விரைவாக தெரியப்படுத்தியது. [5] வளர்ந்து வந்த நடிகையான ரெட், ஆஸ்திரேலிய தயாரிப்பான ஹேர் படத்தில் நடித்தபோது அவருக்கு பிரபலத்துவம் கிடைத்தது. சிட்னி தயாரிப்பில் இளம் ஆப்பிரிக்க அமெரிக்க இறக்குமதிகள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தவர், ரெட். இக்குழுவில் மார்சியா ஹைன்சும் அடங்குவார் . ரெட் அதன் தயாரிப்பில் ஜூன் 6, 1969 முதல் 1971 வரைநடித்துவந்தார்.

ரெட் ஆஸ்திரேலியாவில் பிரபலமானார். அவர் 'கெட் டு நோ' எனும் தொலைக்காட்சித் தொடரின் பேரி சுலோனால் 1971ல் பேட்டி எடுக்கப்பட்டார். ] அமோகோவுக்கான அவரது பிரபலமான விளம்பரங்கள் அவரது சொந்த தொலைக்காட்சி சிறப்புக்கு வழிவகுத்தது. ரெட் மற்றும் ஹேர் இணை நடிகரான டெடி வில்லியம்ஸ் ஏப்ரல் 1971 இல் குடிவரவுத் துறையால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். [6] [7] ஹேர் தவிர, ரெட், டி-ஜீன் அண்ட் ஹிஸ் பிரதர்ஸ் படத்திலும் தோன்றினார். மேலும் 1974 இல், த வெடிங் ஆஃப் இபிஜீனியாவின் அமெரிக்க தயாரிப்பில் நடிக்க லண்டனுக்குச் சென்றார். 1977 ஆம் ஆண்டில், அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரான ரோடாவில் ஷெர்ரி எனும் கதாபாத்திரத்தில் ரெட் நடித்தார். [8] [9] 1978 ஆம் ஆண்டு இசை சார்ஜெண்ட் பெப்பெர்ஸ் லோன்லி ஹார்ட்ஸ் கிளப் பேண்ட் டிலும் விருந்தினராகக் கலந்து கொண்டார். [10]

1970 களின் நடுப்பகுதியில், பெட் மிட்லர், மெர்லே மில்லர் மற்றும் கெயில் கான்டோர் ஆகியோரை மாற்றம் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். இருவரும் மிட்லரின் 1973 சுற்றுப்பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த நலன்களைப் பின்தொடர்வதற்காக வெளியேறினர். இதற்காக மில்லர் 70 கலைஞர்களுக்குத் தேர்வு நடத்தினார். ஆனால் ரெட் அவ்வேலையைக் கைப்பற்றினார். இவாறே பெட்டின் ஹார்லெட்டுகளில் ஒருவரானார், ரெட். [11] ஹார்லெட்டாக நடிப்பதைத் தவிர, கரோல் டக்ளஸ் ("பர்னின்" மற்றும் "நைட் ஃபீவர்") மற்றும் நார்மன் கானர்ஸ் ("யூ ஆர் மை ஸ்டார்ஷிப்") ஆகியவற்றிற்கும் ரெட் பின்னணிக் குரல் கொடுத்தார். மிட்லருடன் தொடர்பை முடித்துக்கொண்ட ரெட், சார்லோட் கிராஸ்லி மற்றும் உலா ஹெட்விக்குடன் 1977 இன் பிற்பகுதியில் எல்பி - பார்மர்லி ஆஃப் தி ஹார்லெட்ஸை வெளியிட்டார். 1978 ஆம் ஆண்டில், விக்டர் ஷரோன் ரெட் உடன் டிஸ்கோவில் "லவ் இன்சூரன்ஸ்" ஐ வெளியிட்டார். அந்த பதிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார்.

அவருடைய சொந்த குரல்கள் "லவ் இன்சூரன்ஸ்" க்காக அங்கீகாரம் பெறவில்லை. ஆனால் அவர் விரைவில் ப்ரீலூட் ரெக்கார்ட்ஸுடன் ஒரு பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் ரெட் அந்நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான கலைஞரானார். அவரது முதல் ஸ்டுடியோ ஆல்பம், 1980களில் ஷரோன் ரெட், ரெட் ஹாட் (1982) மற்றும் லவ் ஹவ் யூ ஃபீல் (1983) ஆகிய தொகுப்புகளை வெளியிட்டார். "பீட் தி ஸ்ட்ரீட்", "இன் தி நேம் ஆஃப் லவ்" மற்றும் "லவ் ஹவ் யூ ஃபீல்" உட்பட்ட நடனப் பாடல்களை பில்போர்டு அட்டவணையில் பல தரவரிசைப் பாடல்களைக் கொண்டிருந்தார். [12]

இந்த வெளியீடுகளுக்குப் பிறகு, ரெட் ஒரு பின்னணிப் பாடகராக தனது வெற்றிகரமான வாழ்க்கைக்குத் திரும்பினார். குறிப்பாக சொய்ரீ குழுவுடன் இணைந்தார். அதில் உறுப்பினர்களான லூதர் வான்ட்ராஸ் மற்றும் ஜோஸ்லின் பிரவுன் ஆகியோரும் அடங்குவர்.

1992 ஆம் ஆண்டின் முற்பகுதியில், " கேன் யூ ஹேண்டில் இட் " இன் மறு-பதிவு செய்யப்பட்ட பதிப்பின் மூலம் இங்கிலாந்தின் சிறந்த 20 பாடல்களில் ஒன்று என்ற வெற்றியைப் பெற்றார். பிபிசி ஒன்னின் சிறந்த பாப் பாடல்களில் நேரடியாகப் பாடினார். [13] இந்த புதிய பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் "ஆல் தி வே டு லவ்" [14] என்ற ஒற்றைப் பாடலை எல் ஏ மிக்ஸின் லெஸ் ஆடம்ஸுடன் பதிவு செய்தார். இது அவரது கடைசி தனிப்பாடலாக இருந்தது. இன்னும் அப்பாடல் வெளியிடப்படாமல் உள்ளது.

மே 1, 1992 இல் ரெட் நிமோனியாவால் இறந்தார். டான்ஸ் மியூசிக் ரிப்போர்ட் இதழில் அவரது மரணம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டது என்று கூறியது. [15] எயிட்சு தீநுண்மி அவரது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியது. ரெட் மேடையில் உடைந்த கண்ணாடியை மிதித்ததைத் தொடர்ந்து அவரது எதிர்ப்புசக்தி மொசமடைந்ததே காரணமாகக் கூறப்படுகிறது.

1993 இல், ரெட்டின் பாடல்கள் "அண்டர் பிரஷர்" என்ற டூயட் இசையில் இடம்பெற்றது. இது அவரது ஒன்றுவிட்ட சகோதரி பென்னி போர்டின் ஆல்பத்தில் காணப்பட்டது.

பிரபலத்துவம்

தொகு

மற்ற நட்சத்திரங்களைப் போல அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், 70களின் பிற்பகுதியிலும் 80களின் முற்பகுதியிலும் டிஸ்கோ காட்சியில் ரெட் தன்னை ஒரு பிரசித்திபெற்றவராக நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. [16] சில்வெஸ்டர் மற்றும் ஆர்தர் ஆஷ் போன்ற பிரபலங்களுடன் இணைந்து கருப்பின வரலாற்று மாதத்தை நினைவுகூரும் ஒரு வளை கண்காட்சியில், தேசிய எய்ட்ஸ் நினைவகத்தால் ரெட் கௌரவிக்கப்பட்டார். [17]

மேற்கோள்கள்

தொகு
  1. Kellman, Andy. "Artist Biography". AllMusic. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 22, 2008.
  2. "Sharon Redd Page". Soulwalking.co.uk. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 10, 2008.
  3. Roberts, David (2006). British Hit Singles & Albums (19th ed.). London: Guinness World Records Limited. p. 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904994-10-5.
  4. "Snap! with Penny Ford official website". பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2022.
  5. Billboard Magazine.
  6. "Two blacks from 'Hair' get boot from Australia". The Miami News. ஏப்பிரல் 9, 1971. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 6, 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "'Hair' players await visas". Sydney Morning Herald. ஏப்பிரல் 30, 1971. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 6, 2010.
  8. To Vegas with Love. பரணிடப்பட்டது 2020-02-05 at the வந்தவழி இயந்திரம்
  9. Johnny's Solo Flight. பரணிடப்பட்டது 2020-02-05 at the வந்தவழி இயந்திரம்
  10. "Sharon Redd - IMDb". மே 1, 2009. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 23, 2012.
  11. "Sharon Redd". அக்டோபர் 19, 1945.
  12. "Sharon Redd Top Songs / Chart Singles Discography". Music VF. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 5, 2020.
  13. "Top of the Pops". சனவரி 30, 1992. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2022.
  14. "Sharon Redd Page". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 10, 2008.
  15. Andyboy (1992-05-22). "The First Cut". DMR 15 (9): 3. "The impact of AIDS on the dance music industry has been felt by many on an excruciatingly personal level. News this week of Prelude artist Sharon Redd's recent death due to AIDS once again brought reality into chillingly clear focus.". 
  16. "Sharon Redd – 20 Years On…". சூன் 9, 2023.
  17. "Black lives lost to AIDS commemorated in heartbreaking virtual exhibition". சூன் 9, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷரோன்_ரெட்&oldid=4108412" இலிருந்து மீள்விக்கப்பட்டது