ஷாஹீன் முகாம் தாக்குதல் 2017

ஆப்கானிஸ்தானின் மசார் ஈ சரீப் நகரிலுள்ள ஷாஹீன் இராணுவ முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் 21 ஏப்ரல் 2017 அன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 135 ஆப்கானிய தேசியப் படை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 65 பேர் காயமடைந்தனர்[1]. தாக்குதல்தாரிகள் இராணுவ சீருடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மொத்தம் பத்து தாக்குதல்தாரிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல்தாரிகளுள் எழுவர் கொல்லப்பட்டனர், இருவர் தற்கொலை குண்டுதாரிகளாகி வெடித்துச் சிதறி இறந்தனர்; மேலும் ஒருவர் ஆப்கான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்[2]. உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கிய தாக்குதல் பின்மாலைப் பொழுதில் நிறைவடைந்தது. இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்[3]. அப்துல் சலாம் கொல்லப்பட்டதன் எதிர்வினையாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "மசார் ஈ சரீப் இராணுவ முகாம் தாக்கப்பட்டது". 2017-04-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Over 50 feared or dead wounded in attack on Afghan corps in Balkh". 22 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "More than 50 killed as Taliban target Afghan Army camp in Mazar-e-Sharif". 22 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.