ஷி யோமி மாவட்டம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

சி யோமி மாவட்டம் (Shi Yomi district) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் 23-வது மாவட்டமாக 9 டிசம்பர் 2018 அன்று நிறுவப்பட்டது.[1][2]மேற்கு சியாங் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் டடோ நகரத்தில் உள்ளது.

ஷி யோமி மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
நிறுவிய நாள்9 டிசம்பர் 2018
தலைமையிடம்டடோ
பரப்பளவு
 • Total2,875 km2 (1,110 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total13,310
 • அடர்த்தி4.6/km2 (12/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுAR

மக்கள் தொகை பரம்பல்

தொகு

ஷி யோமி மாவட்டத்தில் மெம்பா, தாஜின் போன்ற பழங்குடி இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் தோனி போலா, திபெத்திய பௌத்தம் மற்றும் கிறித்தவ சமயங்கள் பயிலப்படுகிறது. தாஜின் மற்றும் மெம்பா மொழிகள் பேசப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் மெச்சுகா, தடோ, பிதி மற்றும் மணிகோங் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Arunachal Assembly Passes Bill For Creation Of 3 New Districts". NDTV.com. https://www.ndtv.com/india-news/for-creation-of-3-new-districts-pakke-kesang-lepa-rada-shi-yomi-arunachal-pradesh-assembly-passes-bi-1908352. 
  2. "Arunachal Pradesh gets 25th district called Shi Yomi". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
  3. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  4. "Mechuka MLA". Archived from the original on 19 August 2016. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷி_யோமி_மாவட்டம்&oldid=3890848" இலிருந்து மீள்விக்கப்பட்டது