ஷேன் நிகாம்

இந்திய திரைப்பட நடிகர்

ஷேன் நிகாம் (Shane Nigam ) இவர் மலையாளப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். 2013ஆம் ஆண்டு சாலை திரைப்படமான நீலகாஷம் பச்சகடல் சுவன்னா பூமி (2013) மூலம் அறிமுகமான இவர், கிஸ்மத் (2016), பரவா (2017), மற்றும் கும்பளங்கி நைட்ஸ் (2019) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக பரந்த கவனத்தைப் பெற்றார்.

ஷேன் நிகாம்
பிறப்பு21 திசம்பர் 1995 (1995-12-21) (அகவை 28)
கொச்சி, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007 – 2010
2013 – தற்போது வரை
உயரம்5 அடி 11 அங்குலம்
பெற்றோர்கலாபவன் அபி (தந்தை)
சுனிலா (தாயார்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கேரளாவின் கொச்சியின் எலமக்காராவில் அபி மற்றும் சுனிலா ஆகியோருக்கு ஷேன் மூன்று குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். எலாமக்கராவின் பவன் வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கொச்சியின் ராஜகிரி பொறியியல் கல்லூரியில் பயின்றார். இவருக்கு அஹானா மற்றும் அலீனா என்ற இரண்டு தங்கைகள் உள்ளனர்.[1] ஷேனின் தந்தை அபி [2][3] ஒரு நடிகரும் பிரபலமான பலகுரல் கலைஞரும் ஆவார்.

தொழில்

தொகு

திரைப்பட வாழ்க்கை

தொகு

அன்னாவின் (ஆண்ட்ரியா எரேமியா) சகோதரர் கதாபாத்திரத்தில் அன்னயம் ரசூலம் என்ற படத்தின் மூலம் நிகாம் நடிகராக அறிமுகமானார்.[4] பின்னர் ராஜீவ் ரவி இவருக்கு என்ஜான் ஸ்டீவ் லோபஸ் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை வழங்கினார். ஆனால் இவர் அந்த பாத்திரத்தை ஏற்கவில்லை.

சுருதி மேனனுக்கு ஜோடியாக 2016 ஆம் ஆண்டில் வெளியான கிஸ்மத் என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜீவ் ரவி அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கினார். அவரது கதாபாத்திரம் மலையாளப் பார்வையாளர்களிடையே அவருக்கு பாராட்டைப் பெற்றுத்தந்ததுடன் வணிகரீதியான வெற்றியையும் பெற்றது.[5]

2017ஆம் ஆண்டு சி / ஓ சாய்ரா பானு படத்தில் மூத்த நடிகர்களான அமலா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோருடன் நிகாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[6] அடுத்த ஆண்டு, இவர் ஈடா என்ற காதல் படத்தில் தோன்றினார். இது விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.[7]

நிகாம் 2019இல் இரண்டு படங்களில் நடித்தார்; நகைச்சுவை நாடகம் கும்பளங்கி நைட்ஸ், இது திரையரங்க வசூலில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. காதல் திரைப்படமான இஷ்க் (2019 திரைப்படம்) மிதமான விமர்சனங்களைப் பெற்றது.[8]

குறிப்புகள்

தொகு
  1. നടനും മിമിക്രി താരവുമായ അബി അന്തരിച്ചു. Manorama Online (30 November 2017).
  2. Sreenivasan, Deepthi (16 July 2016) "Playing the rebellious lover: Shane Nigam". Deccan Chronicle.
  3. "Shane Nigam is the son of veteran comedian Aby!" Times of India. 31 July 2016
  4. "The Actor's Qissa". Newindianexpress.com (1 August 2016). Retrieved on 2019-09-04.
  5. 'Kismath' movie review: Live audience updates of Shane Nigam, Shruthy Menon-starrer. Ibtimes.co.in (29 July 2016). Retrieved on 2019-09-04.
  6. "Shane Nigam turns law student for C/O Sairabanu". The Times of India. 24 September 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
  7. "'Eeda' to release in January, the film stars Shane Nigam and Nimisha Sajayan". The News Minute. 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
  8. Neelima Menon (11 July 2019). "Kumbalangi Nights, Unda, Virus, Ishq: Best Malayalam films of 2019 so far have celebrated big and small stars". Firstpost. https://www.firstpost.com/entertainment/kumbalangi-night-unda-virus-ishq-best-malayalam-films-of-2019-so-far-have-celebrated-big-and-small-stars-6973261.html. பார்த்த நாள்: 15 July 2019. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேன்_நிகாம்&oldid=3505851" இலிருந்து மீள்விக்கப்பட்டது