ஷோபனசுந்தரி முகோபாத்யாய்

ஷோபனசுந்தரி முகோபாத்யாய் (ஷோவோனா தேவி தாகூர் 1877 இல் கல்கத்தாவில் பிறந்தார்; மே 26, 1937 இல் ஹவுராவில் இறந்தார்[1]) ஒரு இந்திய எழுத்தாளர், அவரது நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர் ஹேமேந்திரநாத் தாகூரின் மகளும் எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் மருமகளும் ஆவார்.

ஷோபனசுந்தரி முகோபாத்யாய்
Young woman looking to the right, wearing a high-necked dark dress, a gemstone necklace, and a light-colored sash. Her name, Shovona Tagore, is signed in the lower right.
ஷோவோனா தேவி தாகூர், 1915
பிறப்பு1877
கொல்கத்தா
இறப்பு1937
ஹவுரா, British India
மற்ற பெயர்கள்ஷோவோனா தேவி, ஷோவோனா தேவி தாகூர், ஷோவனா தேவி,ஷோவோனா தாகூர்
உறவினர்கள்இரவீந்திரநாத் தாகூர் மருமகள்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஹேமேந்திரநாத் தாகூரின் ஐந்தாவது மகள், ஷோவோனா தேவி தாகூர் கல்கத்தாவில் (கொல்கத்தா) மேட்டுக்குடியில் ஆங்கிலம் படித்து, இந்துக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். அவர் ஜெய்ப்பூரில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த நாகேந்திரநாத் முகோபாத்யாய் என்பவரை மணந்தார்.[2][3] 1923 ஆம் ஆண்டில், அவரது மாமா இரவீந்திரநாத் தாகூர் இளம் ஷோவோனாவுக்கு "ஷில்லாங்-எர் சித்தி" ("சில்லாங்கிலிருந்து கடிதம்") கவிதையை எழுதினார்.[4] 1937 ஆம் ஆண்டு தனது அறுபதாவது வயதில் இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தார்.

எழுத்து தொகு

முகோபாத்யாயாவின் முதல் திட்டமானது அவரது அத்தை சுவர்ணகுமாரி தேவியின் பெங்காலி நாவலான காஹகேவை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ததாகும்.[3][5] இதற்குப் பிறகு, உள்ளூர் வாய்மொழி மரபுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளைப் பதிவு செய்வதில் ஷோபனசுந்தரி முகோபாத்யாய் ஆர்வம் காட்டினார்.

தி ஓரியண்ட் பேர்ல்ஸ் (1915) இந்திய நாட்டுப்புறக் கதைகள் இருபத்தெட்டு நாட்டுப்புறக் கதைகளைக் கொண்டது , அவை முகோபாத்யாயாவால் சேகரிக்கப்பட்டன, சில குடும்பப் பணியாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.[2][3][6] இந்த புத்தகத்திற்கான அவரது முன்னுரை குறிப்பு அவரின் உத்வேகம் மற்றும் செயல்பாட்டினை விவரிக்கிறது.

எனது மாமா சர் இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைத் தொகுப்பினைப் படிக்கும்போது இந்தக் கதைகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது; ஆனால் அவரது அறிவுத்தன்மை என்னிடம் இல்லாததால், நான் நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து அவற்றை ஆங்கில உடையில் வைக்கத் தொடங்கினேன்; மேலும் பின்வரும் பக்கங்களில் உள்ள கதைகள் பல கல்வியறிவற்ற கிராமத்து மக்களால் என்னிடம் கூறப்பட்டது, இன்னும் சில என் பணியில் இருக்கும் ஒரு பார்வையற்றவர், நினைவாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன் கொண்டவர் கூறியவைகள்.[7]

தி ஓரியண்ட் பேர்ல்ஸ் ஆனது தி டயல் மற்றும் தி ஸ்பெக்டேட்டர் போன்ற வெளியீடுகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டது,மேலும் அது வெளியான சிறிது காலத்திலேயே உலகெங்கிலும் உள்ள நூலகங்களில் வெளிவந்தது.[8][9][10] உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் பேசும் நாட்டுபுறவியலாளர்களின் கவனத்தினை இந்த வங்காள நாட்டுப்புறக் கதைப் புத்தகம் ஈர்த்தது.இந்தியப் பெண்களின் எழுத்துக்களில் சமீபத்திய கல்வித்தொகுப்புகளில் இவரது கதைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சில அறிஞர்கள் முகோபாத்யாயாவின் படைப்பு மற்றும் அதன் முறையினை ஆங்கிலேய காலணித்துவ இனவரைவியல் போன்றது என நிலைப்படுத்துகின்றனர்.[2][11] சமூக சீர்திருத்தம் பற்றிய நுட்பமான கருத்துக்கள் மற்றும் காலணியேற்றக்காரர்களின் மொழியில் நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கலான சூழல்களைக் கொண்டு இதனை இந்தியாவில் பல இடங்களில் உருவாக்கப்பட்ட விக்டோரியன் சிறுகதை தொகுப்புடன் அதன் ஒற்றுமைகளை விவரிக்கின்றனர்.சிலரின் பார்வை அவர் உள்ளுர் கலாச்சாரத்தின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தை இந்திய தேசியவாதத்திற்க்கு முன்னோடியாக காட்டுகிறார்.ஒரு அறிஞர் தாகூரின் முன்னுரையானது ஒரு பெண் எழுத்தாளரின் கட்டுண்ட நிலையை காட்டுகிறது என வாதிடுகிறார்.

பிற்கால பணிகள் தொகு

முகோபாத்யாய் 1915 மற்றும் 1920 ஆம் ஆண்டிற்கு இடையில் இலண்டனை தளமாக கொண்ட மேக்மில்லன் என்ற பதிப்பகத்திற்காக இந்திய நாட்டுப்புறவியல், மதம் ,கலாச்சாரம் மற்றும் தொன்மங்கள் குறித்து நான்கு புத்தங்கங்களை வெளியிட்டார்.கதைக்கான மூலங்களின் தகவலையும் சேர்த்தார்,முன்பு அவ்வாறு செய்யவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. "Deaths". The Times of India (Mumbai, India): p. 2. 10 June 1937. 
  2. 2.0 2.1 2.2 Prasad, Leela (2020-11-15) (in en). The Audacious Raconteur: Sovereignty and Storytelling in Colonial India. Cornell University Press. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5017-5228-5. https://books.google.com/books?id=QxfMDwAAQBAJ&q=shovona+devi&pg=PA7. 
  3. 3.0 3.1 3.2 Deb, Chitra (2010-04-06) (in en). Women of The Tagore Household. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5214-187-6. https://books.google.com/books?id=HvU6CwAAQBAJ&dq=Shobhana+tagore&pg=PT138. 
  4. Das, Manosh (June 28, 2012). "Tagore's 'Letter from Shillong' in English". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Rani, K. Suneetha (2017-09-25) (in en). Influence of English on Indian Women Writers: Voices from Regional Languages. SAGE Publishing India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81345-34-4. https://books.google.com/books?id=8RpBDwAAQBAJ&dq=Shobhana+tagore&pg=PT55. 
  6. Prasad, Leela (October 2015). "Cordelia's Salt: Interspatial Reading of Indic Filial-Love Stories". Oral Histories 29 (2): 253. https://journal.oraltradition.org/issues/29ii/volume-29-issue-2-transmissions-and-transitions-in-indian-oral-traditions/. 
  7. Mukhopadhyay, Shobhanasundari (1915) (in en). The Orient Pearls. New York: MacMillan and Co., Ltd.. https://en.wikisource.org/wiki/The_Orient_Pearls. 
  8. (in en) Bulletin of the Public Library of the City of Boston. Boston: The Trustees of the Boston Public Library. 1916. பக். 123. https://books.google.com/books?id=7VFGAQAAMAAJ&q=shovona&pg=PA124. 
  9. "New Books". The Dial LX (716): 394. April 13, 1916. https://books.google.com/books?id=12U6AQAAMAAJ&q=shovona+devi&pg=RA1-PA394. 
  10. "The Orient Pearls by Shovona Devi (book review).". The Spectator 115 (4564): 885. December 18, 1915. "This is a collection of fairy-stories, fables, and folklore which may take a good place among the numerous books of this kind that now come to us from India. If the English is the unaided work of Sir Rabindranath Tagore's niece, it is a remarkable achievement; little naïvetés of expression and unexpected terms add piquancy rather than detract from the effect.". 
  11. Prasad, Leela (2003). "The Authorial Other in Folktale Collections in Colonial India: Tracing Narration and its Dis/Continuities". Cultural Dynamics 15 (1): 7. doi:10.1177/a033107. https://www.academia.edu/9738454. 

தாகூர் குடும்பம்