ஸாஹ்பாஷ்பூர்
ஸாஹ்பாஷ்பூர் (शाहबाजपुर Shahbazpur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள அராரியா மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம்.[1] இது இந்திய நோபாள எல்லையில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுஇது அராரியா நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர்கள் தொலைவிலும், இந்திய நேபாள எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமம் தேசிய நெடுஞ்சாலை NH-54 உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கோஸி ஆற்றின் துணை ஆறான பார்மன் ஆறு இக்கிராமத்தின் அருகே செல்கின்றது.
மக்கள்
தொகுஇங்கு வசிப்போரில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் மைதிலி பிராமணர்கள் ஆவர். இவர்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். இவர்களின் கல்வியறிவு 90% ஆகும். இந்தக்கிராமத்தின் மொத்த மக்கட்தொகை 7,000 ஆகும். என இவ்வூர் மக்களால் . சதி மாதாவின் (Mata Sati) எரிந்த உடல்பகுதி இங்கு விழுந்ததாக இவ்வூர் மக்களால் நம்பப்படும் இக்கிராமம் ஒரு முக்கிய சக்தி பீடம் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பெரிய கோவில் ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சான்றுகள்
தொகு- ↑ ""National Habitation Survey 2010 "". Archived from the original on 2014-09-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-19.