ஸூரத்துல் மாஊன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸூரத்துல் மாஊன் ஆங்கில மொழி: Sūrat al-Māʿūn'அரபு மொழி: سورة الماعون அற்பப் பொருட்கள் என்பது திருக்குர்ஆனின் 107வது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 107 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
பெயர்
தொகுஸூரத்துல் மாஊன் அரபு மொழி: سورة الماعون அரபுச் சொல்லுக்கு அற்பப் பொருட்கள் எனப் பொருள்.
அற்பப் பொருட்கள்
தொகுஇல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞107:1. | أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ | (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? |
۞107:2. | فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ | பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். |
۞107:3. | وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ | மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. |
۞107:4. | فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ | இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். |
۞107:5. | الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ | அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். |
۞107:6. | الَّذِينَ هُمْ يُرَاءُونَ | அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். |
۞107:7. | وَيَمْنَعُونَ الْمَاعُونَ | மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு [தொடர்பிழந்த இணைப்பு]
- Surah Al-Ma'un[தொடர்பிழந்த இணைப்பு] (Complete text in Arabic with English and French translations)
- குட்டன்பேர்க் திட்டத்தில் Abdullah Yusuf Ali இன் படைப்புகள்
- The Holy Qur'an, translated by Abdullah Yusuf Ali
- Three translations at Project Gutenberg
- குட்டன்பேர்க் திட்டத்தில் Marmaduke Pickthall இன் படைப்புகள்
- The Qur'an as it explains itself பரணிடப்பட்டது 2014-02-11 at the வந்தவழி இயந்திரம்
- "Qur'anic Verses (107-9, 110-112)" is a manuscript that dates back to the 15th century and features Al-Ma'un
பிற தகவல்கள்
தொகு
|