இசுபிரிட் தளவுலவி

(ஸ்பிரிட் தளவுளவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுபிரிட் (MER-A, Mars Exploration Rover - A), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுலவிகளில் (rover) முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுலவியான ஆப்பர்சூனிட்டி தளவுலவி (Oppportunity Rover) இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) தரையிறங்கியது.

இசுபிரிட் தளவுலவி
Spirit rover
செவ்வாய்க் கோளில் தளவுலவி
இயக்குபவர்நாசா
திட்ட வகைதளவுலவி (Rover)
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்ஜனவரி 4, 2004இல் தரையிறங்கியது.
தே.வி.அ.த.மை எண்2003-027A
இணைய தளம்JPL's Mars Exploration Rover home page
ஸ்பிரிட் தளவுலவி செவ்வாயில் தரையிறங்கிய பகுதி
ஸ்பிரிட் தளவுலவியினால் அனுப்பப்பட்ட முதலாவது வண்ணப் படம்

நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுலவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய நிலவியல் (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது (2008).

நீருக்கான ஆதாரங்கள்

தொகு

இரண்டு ஆண்டுகளில் இசுபிரிட் தளவுலவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் ஹம்ப்ரீ என்ற பாறையில் நீர் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக மார்ச் 5, 2004 இல் நாசா அறிவித்தது[1].

பொனெவில் குழி

தொகு

மார்ச் 11, 2004 இல், 400-யார்டு (370 m) பயணத்தின் பின்னர் ஸ்பிரிட் தளவுலவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி 150 யார்டுகள் (140 m) அகலமும் 30 யார்டுகள் (27 m) ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் ஸ்பிரிட் இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து கொலம்பியா குன்றுகளை நோக்கிச் செலுத்தப்பட்டது.

 
Bonneville Crater.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபிரிட்_தளவுலவி&oldid=3579669" இலிருந்து மீள்விக்கப்பட்டது