ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோயில்

ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகும். பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் கோயில்தான் ஆரம்பத்தில் இந்த இறைவனின் மூலஸ்தானமாக இருந்தது. [1]

தெய்வங்கள்

தொகு

இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். பார்வதிக்கு சிற்பம் இல்லை என்றாலும், அவள் சன்னதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. சுத்தம்பலத்திற்குள் சாஸ்தாவிற்கான ஒரு சன்னதி உள்ளது. விநாயகர் (கணபதி), நாகக் கடவுள்கள் மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்கள் சுத்தம்பலத்திற்கு வெளியில் உள்ளன. பூதத்தன் என்று வணங்கப்பட்ட சிற்பமானது உண்மையில் ஒரு யக்ஷி என்று பல பக்தர்கள் கூறுகிகின்றனர். கொடிமரத்திற்கு அருகில் தூண்களில் செதுக்கப்பட்ட அனுமன் மற்றும் முருகன் ஆகிய இருவரின் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. அனைத்து தெய்வங்களும் கிழக்கு நோக்கி உள்ளன. கணபதியின் சன்னதியை ஒட்டி பராசக்தியின் சிற்பம் உள்ளது. இச்சிற்பமானது முன்னர் அருகிலுள்ள களரியில் வழிபாட்டில் இருந்ததாகும்.

நிர்வாகம்

தொகு

இக்கோயில் திரவான்கூர் தேவஸ்தானக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள், முக்கியமான நாட்கள்

தொகு

இக்கோயிலில் தினசரி பூசை காலை 3.30க்கு ஆரம்பமாகிறது. நிர்மால்ய தரிசனம் இங்கு புகழ்பெற்றதாகும். அத்தரிசனத்தை தொடர்ந்து 41 நாள்கள் ஈடுபடுபவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்கோயிலில் தினமும் நான்கு கால பூசைகள் நடத்தப்பெறுகின்றன. [2]மகா சிவராத்திரியும் திருவாதிரையும் மலையாள மாதமான தனுவின் திருவாதிரை நாளும் அதிகமான கூட்டத்தை இக்கோயிலுக்கு ஈர்க்கின்ற விழா நாட்களாகும்.


மேற்கோள்கள்

தொகு
  1. "Sreekanteswaram Temple - Thiruvananthapuram". Wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 2015-03-18.
  2. Sreekanteswaram