திருவாஞ்சியம்
திருவாஞ்சியம் (Thiruvanchiyam அல்லது Srivanchiyam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம். இவ்வூரில் திருவாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவாஞ்சியம் கிராமத்தின் புவியியல் பரப்பளவு 428.27 ஹெக்டேர் மற்றும் மக்கள் தொகை 2518 ஆகும், இதன் அருகிலுள்ள நகரம் நன்னிலம், இது 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]
ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்
தொகுஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் கிராமத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இத் திருத்தலத்தில் இருக்கும் சிவபெருமானின் பெயர் வாஞ்சிநாதர் என்பதாகும். சக்தியின் பெயர் மங்கலநாயகி என்பதாகும்.[2] இக் கோயில் 1100 வருடம் பழமை வாய்ந்தது. மேலும், 850ம் ஆண்டில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும்.[3]
கோயிலின் தனித்தன்மை
தொகுஇக் கோயிலில் இந்து கடவுளான யமனிற்கு தனிச் சன்னிதி உள்ளது. யமதர்மன் இறப்பு மற்றும் மனிதர்களின் புண்ணிய பாவங்களை பரிசீலிக்கும் இந்துக் கடவுளாவார். மற்ற அனைத்துக் கோயில்களிலும் பிள்ளையார் சன்னதி முதலில் காணப்படும். ஆனால் இங்கு முதலில் யமனின் சன்னதி காணப்படுகிறது. இக் கோயிலின் வழக்கப்படி இங்கு தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் யமனை தரிசனம் செய்துவிட்டு பின்னரே மற்ற சன்னிதிகளுக்குச் செல்கின்றனர். மேலும், இங்கு இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. ஒன்று கோயிலின் கிழக்கு திசையிலும் மற்றொன்று மேற்கிலும் அமைந்துள்ளது.[4]
இந்த திருக்கோயில் காசிக்கு சமமாக கருதப்படும் ஆறு சிவன் கோயில்களில் ஒன்றாகும். காசி விசுவநாதர் கோயிலுக்கு சமமான காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
- திருவையாறு
- திருவிடைமருதூர்
- மயிலாடுதுறை
- சாயாவனேசுவரர் கோயில், சாயாவனம். (பூம்புகார் அருகில் உள்ளது)
- திருவெண்காடு
- திருவாஞ்சியம்
திருத்தல மகிமை
தொகுகாவிரி ஆற்றங்கரையில் உள்ள மேற்கண்ட சிவன் கோயில்களுக்கு வருகை தருவது சிவ பக்தர்களின் பாவங்கள் மட்டுமல்லாது, அவரது மூதாதையர்களின் பாவங்களையும் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியத்தில் யம தீர்த்தம் மற்றும் குப்த கங்கை ஆகியவை கோவில் தீர்த்தங்களாக உள்ளது. இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால், அது புறப்பட்ட ஆத்மாக்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கும் என்று தல வரலாற்றில் கூறப்படுகிறது. ஸ்ரீவஞ்சியத்தின் மண்ணில் புறப்படும் ஆத்மாக்களுக்கு வஞ்சிநாத பகவான் மோட்சத்தை அளிப்பதால் இந்த இடத்தில் மரணம் புனிதமாகவும், இந்த இடம் காசிக்கு சமமாகவும் கருதப்படுகிறது. இந்த கோயில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட திறந்திருக்கும் (இது கிரகணங்களின் போது மூடப்படும் அனைத்து கோயில்களுக்கும் முரணானதாகும்). பொதுவாக, கிராமத்தில் மரணம் ஏற்படும் போது அங்குள்ள கோயிலை மூடுவது வழக்கம், ஆனால் இந்த கிராமத்தில் எந்தவொரு நபரும் இறக்கும் போது வஞ்சிநாதர் கோயில் மூடப்படாமல் திறந்திருக்கும். காசியில் உள்ள கங்கையை விட இங்குள்ள குப்தா கங்கை தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
விழாக்கள்
தொகுதமிழ் மாதமான கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெறுகிறது. இது பத்து நாள் உற்சவமாகவும், மாதக் கடைசியில் தேரோட்டமும் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது பகவான் சன்னிதிகள் வாஞ்சிநாதர் கோயிலில் உள்ளன. மேலும் இது சனி பகவானின் பரிகாரத் தலமாகவும் உள்ளது. (சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது). திருவாஞ்சியம், குடவாசல் மற்றும் நன்னிலம் ஆகிய ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. பல சிறு கோயில்களும் இந்த ஊரில் அமைந்துள்ளன.
போக்குவரத்து
தொகுசென்னையில் இருந்து கும்பகோணம் செல்லவேண்டும், பின்பு அங்கிருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.
பேருந்து தடம்
தொகுதடம் எண்: 430 (கும்பக்கோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகபட்டினம் செல்லும் பேருந்துகள்) தடம் எண்: 28, 335 (கும்பக்கோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பேருந்து)
சான்றுகள்
தொகுஸ்ரீவாஞ்சியநாதர் திருக்கோயில் திருவாஞ்சியம் -தல வரலாறு
- ↑ "Srivanjiyam Village in Nannilam (Thiruvarur) Tamil Nadu | villageinfo.in". villageinfo.in. Retrieved 2017-03-29.
- ↑ nsnsamy@gmail.com. "Vaanchinathar Temple, Tiruvaanchiyam". www.shivatemples.com (in ஆங்கிலம்). Archived from the original on 2017-04-16. Retrieved 2017-03-29.
- ↑ "Vanchinathar Temple : Vanchinathar Temple Details | Vanchinathar- Sri Vanchiam | Tamilnadu Temple | வாஞ்சிநாதர்". temple.dinamalar.com. Retrieved 2017-03-29.
- ↑ "srivanjiyam Archives - Temples of Tamilnadu". Temples of Tamilnadu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-03-29. Retrieved 2017-03-29.