ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஜெயின் மகளிர் கல்லூரி
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை, அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. புது தில்லி, பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (என்ஏஏசி) ஏ- தரச்சான்றை பெற்றுள்ளது.[1]
Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women | |
குறிக்கோளுரை | Go Beyond |
---|---|
வகை | தனியார், சுயநிதி, மகளிர் |
உருவாக்கம் | 2005 |
சார்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் எஸ். பத்மாவதி |
மாணவர்கள் | 3400 |
அமைவிடம் | , , 13°03′46″N 80°22′8″E / 13.06278°N 80.36889°E |
சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official Website |
வரலாறு
தொகு1937ஆம் ஆண்டில் ஸ்ரீ ஸ்வேதாம்பரர் ஸ்டானக்வாசி சமண கல்வி சங்கம் நிறுவப்பட்டது. இந்த கல்விச் சங்கத்தின் ஒரு பிரிவாக ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு 2004 செப்டம்பர் 16 அன்று அனுமதி வழங்கியது. இக்கல்லூரியானது 2005 மே 18-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றது.
கல்வி
தொகுஇக்கல்லூரியில் 13 இளநிலை மற்றும் 3 முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2]
வழங்கப்படும் பாடங்கள்
தொகுமுதல் வேலைநேரம் ( முற்பகல்: 8.00 முதல் பிற்பகல் 12.40 வரை)
வணிகவியல் படிப்புகள்
- இளநிலை வணிகவியல் (ஹானர்ஸ்)
- இளநிலை வணிகவியல் (பொது)
- இளநிலை வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதி)
- இளநிலை வணிகவியல் (பெருவணிக செயலாளர்)
- முதுநிலை வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதி)
- எம்.பில் (வர்த்தகம்)
அறிவியல் படிப்புகள்
- இளமறிவியல் (கணினி அறிவியல்)
- இளமறிவியல் (கணிதம்)
- இளமறிவியல் (உளவியல்)
- பிசிஏ
மேலாண்மைப் படிப்புகள்
- பிபிஏ (வணிக நிர்வாகம்)
- ஊடகம் மற்றும் தொடர்பியல் படிப்புகள்
- இளமறிவியல் (காட்சித் தொடர்பியல்)
- முதுநிலை (ஊடகம் மற்றும் தொடர்பியல்)
இரண்டாம் வேலை நேரம் ( பிற்பகல்: 1.10 முதல் -5.50 வரை)
வணிகவியல் படிப்புகள்
- இளநிலை வணிகவியல் (பொது)
- இளநிலை வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதி)
- இளநிலை வணிகவியல் (பெருவணிக செயலாளர்)
- இளநிலை வணிகவியல் (வங்கி மேலாண்மை)
- இளநிலை வணிகவியல் (கணினி பயன்பாடுகள்)
- இளநிலை வணிகவியல் (தகவல் அமைப்பு மேலாண்மை)
அறிவியல் படிப்புகள்
- பி.சி.ஏ (கணினி பயன்பாடுகள்)
- முது அறிவியல் கணினி அறிவியல்
சமய படிப்புகள்
- ஜைனவியல்- பட்டயப் படிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Accreditation for women college". thehindu.com/. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
- ↑ "Shasun College Programs Offered". shasun.edu.in/. Shasun College. Archived from the original on 9 May 2015. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.