ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் (பி. பிப்ரவரி 23, 1967, சண்டிகர், இந்தியா), கொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பணி புரிகிற அமெரிக்க நீதிபதி. ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியிலிறுந்து பட்டம் பெற்று, 2013இல் பராக் ஒபாமாவால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு மேலவையால் உறுதி செய்யப்பட்டார். இதற்கு முன் இவர் தனிப்பட்ட வழக்கறிஞராகவும், அமெரிக்க துணை அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசன் | |
---|---|
கொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 24, 2013 | |
நியமிப்பு | பராக் ஒபாமா |
முன்னையவர் | ரேமண்ட் ரான்டோல்ஃப் |
துணை அரசுத் தலைமை வழக்கறிஞர் | |
பதவியில் ஆகஸ்ட் 26, 2011 – மே 24, 2013 | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா |
முன்னையவர் | நீல் காட்யால் |
பின்னவர் | இயன் கெர்சென்கோர்ன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 23, 1967 சண்டிகர், இந்தியா |
முன்னாள் கல்லூரி | ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகம் |
ஸ்ரீநிவாசனின் தாயார், தந்தையார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். 1960களில் இவரின் குடும்பம் அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்திற்கு குடியேறியுள்ளனர்.