ஹமீட் அல்ஹுசைனி கல்லூரி

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி (Hameed Al Husseinie College) கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு புதுக்கடையில் அல்ஹுசைனி வீதியில் அமைந்துள்ள முன்னணி முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்று. இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.

ஹமீட் அல்ஹுசைனி கல்லூரி

ஆரம்பத்தில் இப்பாடசாலை 'அல்மத்ரசதுல் கைரிய்யதுல் இஸ்லாமியா' எனும் பெயரில் அரபுப் பாடசாலையாக நவம்பர் 15 1884 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையை ஆரம்பிப்பதில் அறிஞர் மு. கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார், அஹமட் ஒராபி பாசா ஆகியோர் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர். 1921ஆம் ஆண்டில் இப்பாடசாலை ஹமீதியா ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை எனவும், 1961 ஆம் ஆண்டில் ஹமீட் அல்ஹுசைனி மகாவித்தியாலம் எனவும் பெயர் மாற்றம் பெற்றது. இக்கல்லூரி 1996 சூலை 26 இல் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

இப்பாடசாலையில் தற்போது 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இங்கு வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமீட்_அல்ஹுசைனி_கல்லூரி&oldid=1519847" இலிருந்து மீள்விக்கப்பட்டது