ஹரனின் படித்துறை
ஹரனின் படித்துறை (Har Ki Pauri) (இந்தி: हर की पौड़ी), வட இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் அரித்துவார் நகரத்தில் பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த புகழ் பெற்ற படித்துறைக்கு ஹரனின் படித்துறை என்பர்.
பெயர்க் காரணம்
தொகுவடமொழியில் ஹரன் என்பதற்கு சிவன் என்றும் பௌரி என்பதற்கு படித்துறை என்றும் பொருளாகும்.
சிறப்புகள்
தொகுஹரனின் படித்துறையின் ஒரு கல்லில் ஹரியின் பாதங்கள் பொறிந்துள்ளது.[1]
விழாக்கள், பூஜைகள்
தொகுகங்கை ஆறு மலையிலிருந்து இறங்கி, முதலில் அரித்துவார் சமவெளியில் பாய்கிறது. அரித்துவாரில் பாயும் கங்கை ஆற்றின் மேற்கு கரையில் உள்ள ஹரனின் படித்துறையில் நாள்தோறும் மாலை ஆறு மணி அளவில், வாரணாசியில் நடைபெறுவது போன்று, கங்கா ஆரத்தி பூஜை நடைபெறுகிறது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரனின் படித்துறையில் உலகப் புகழ் பெற்ற கும்பமேளா நடைபெறுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு