ஹரிதாஸ் கிரி

தத்துவ ஞானி


சுவாமி ஹரிதாஸ் கிரி தென்னிந்தியாவின் தமிழ்நாடு, தென்னாங்கூர் கிராமத்தில் மார்கழி மாதத்தில் (டிசம்பர்-ஜனவரி) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் குருஜி என்றும் அழைக்கப்படுகிறார்.

ஹரிதாஸ் கிரி - குருஜி
பிறப்புதென்னாங்கூர், தமிழ்நாடு, இந்தியா
சமயம்இந்து
தலைப்புகள்/விருதுகள்தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில்
தத்துவம்அத்வைத வேதாந்தம்
குருசிவானந்த கிரி, ஞானானந்த கிரி
தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில்

வாழ்க்கை

தொகு

தட்சிண சம்பிரதாய நாமசங்கீர்த்தனத்தை இந்தியாவில் பரப்புவதில் சுவாமி ஹரிதாஸ் கிரி முக்கிய பங்கு வகித்தார். இவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்து தட்சிண பாரத சம்பிரதாயத்தின் பல உரைகள் பஜனைப் பாடுதல் ஆகியவற்றை நிகழ்த்தினார். இவர் சுவாமி ஞானானந்த கிரியின் தலைமைச் சீடர் ஆவார். தனது முழு வாழ்க்கையையும் தனது குருவான சுவாமி ஞானானந்த கிரிக்கு சேவை செய்ய அர்ப்பணித்தார். தென்னிந்தியாவில் தென்னாங்கூர் தட்சிண ஹாலாஸ்யம் எனும் ஆன்மீகப் புகலிடத்தை நிறுவினார். ஸ்வாமி ஹரிதோஸ் கிரி ஒரு பாண்டுரங்கன் கோவிலைக் கட்டினார், இதில் அவரது குரு சுவாமி ஞானானந்த கிரியின் சன்னதி மற்றும் பக்தர்கள் தங்குவதற்கு குடிசைகள், கோவில்கள் மற்றும் உணவகங்களையும் கட்டியுள்ளார். சுவாமி ஹரிதோஸ் கிரி இதை 14 ஆண்டுகளுக்குள் கட்டினார்.[1]

அவர் தனது குருவான சுவாமி ஞானானந்த கிரியின் அறிவுறுத்தலின்படி, நாமசங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக சிங்கப்பூர்[2], மலேசியா மற்றும் பிற நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பயணம் செய்தார். அவருக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.[3]

மறைவு

தொகு

செப்டம்பர் 4, 1994 அன்று கோட்டேஸ்வரில், ஹரிதாஸ் கிரி தனது சுய உணர்வுடன் தன் பக்தர்களின் முன் அலக்நந்தா நதியில் ஜலசமாதிக்குச் (நீரில் மரணம்) சென்றார், பின்னர் அவர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார், அதன் பின்னர் அவரைக் காணவில்லை. கோடீஸ்வரில் கோடேஸ்வர் மகாதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில் உள்ளது. ஸ்வாமி ஹரிதாஸ் கிரியின் முதன்மை சீடர் ஸ்வாமி நமானந்த கிரி, சுவாமி ஹரிதாஸ் கிரியின் நினைவாக பஜனை மேடையை உருவாக்கி அவருக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீ நிரஞ்சனநாத கிரியின் சீடர்கள் இப்போது ஹரிதாஸ் கிரியின் மரபைப் பின்பற்றுகின்றனர்.[4]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tourist Guide to South India/ Sura Pvt Ltd/Thennangore Radhekrishna Temple - Pg 31
  2. Religion-State Encounters in Hindu Domains:From the Straits Settlements to Singapore/Vineeta Sinha- pg 198
  3. Sri Krishna leela tarangini, Volume 2/Mudgala Trust, 1990 - Pg 443
  4. "Swamy Haridhos | Bengt Berger" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிதாஸ்_கிரி&oldid=3712938" இலிருந்து மீள்விக்கப்பட்டது