ஹரிவு
ஹரிவு (திரைப்படம்) ( கன்னடம்: ಹರಿವು ) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட மொழித் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குனரான மஞ்சுநாத சோமகேசவ ரெட்டி (எஸ் மஞ்சுநாத் / மன்சோர்) எழுதி இயக்கிய திரைப்படமாகும்.[1] பிரபல கன்னட செய்தித் தாளில் வெளிவந்து, ஆவணப்படுத்தப்பட்ட ஒரு உண்மை வாழ்க்கை நிகழ்வாகும். டாக்டர். ஆஷா பெனகப்பா [2][3] இந்த நிகழ்வை திரைப்படமாக உருவாக்குவதற்கான எண்ணத்தை வழங்கினார்.[4][5]
ஹரிவு | |
---|---|
இயக்கம் | மன்சோர் (மஞ்சுநாத சோமகேசவ ரெட்டி) |
தயாரிப்பு | அவினாசு யூ.செட்டி |
கதை | மன்சோர் (மஞ்சுநாத சோமகேசவ ரெட்டி) |
திரைக்கதை | எச்.ஏ.அணில்குமார் |
இசை | சரண்ராசு |
நடிப்பு | சஞ்சாரி விசய் சுவேதா தேசாய் அரவிந்து குளிகர் மதுசிறீ சிறுவன் சோயிபு எம்.சி.ஆனந்த் சேதன் சேசன்.எம்.பி. பிரசன்னா செட்டி |
ஒளிப்பதிவு | ஆனந்த் சுந்தரேசா |
படத்தொகுப்பு | அவினாசு யூ. செட்டி |
கலையகம் | ஓம் ஸ்டுடியோ |
வெளியீடு | 2014 |
ஓட்டம் | 1:52:44 |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
அண்மைய ஆண்டுகளில் பெங்களூருவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட ஹரிவு நகரமயமாக்கலுக்கும் அந்நியப்படுதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசுகிறார்.
திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்தின் (Directorate of Film Festivals) "சிறந்த கன்னடத் திரைப்படத்திற்கான" 62வது தேசிய விருதை ஹரிவு வென்றுள்ளது.[6][7] இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமான கர்நாடக மாநில விருதை "சிறந்த தயாரிப்பு மற்றும் இயக்கம்" பிரிவின் கீழ் வென்றுள்ளது.[8]"After national honour, 'Harivu' bags top State film award". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.</ref>[9]
கதைச்சுருக்கம்
தொகுகதை உண்மை வாழ்க்கை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நோய்வாய்ப்பட்ட மகனை சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வருகிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி மகன் இறந்துவிடுகிறான். பின்னர் உடலை எப்படி சொந்த ஊருக்கு கொண்டு செல்வது என்ற குழப்பத்தை விவசாயி எதிர்கொள்கிறார்.
விருதுகள்
தொகு- 24 மார்ச் 2015 அன்று அறிவிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான 62 வது தேசிய திரைப்பட விருதுகளில் இந்த திரைப்படம் சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருதினை வென்றுள்ளது.
- இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமான கர்நாடக மாநில விருதை "சிறந்த தயாரிப்பு மற்றும் இயக்கம்" பிரிவின் கீழ் வென்றுள்ளது.[8]
திரையிடல்
தொகு- இப்படம் 7வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா 2014 ஆம் ஆண்டில் திரையிடப்பட்டது.[4] இது கன்னட போட்டிப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- தில்லி சர்வதேச திரைப்பட விழா 2014 ஆம் ஆண்டில் திரையிடப்பட்டது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meaningful frames". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ ಬಡವರಿಗೆ ಬದುಕು ತುಟ್ಟಿ; ಸಾವು ಇನ್ನೂ ತುಟ್ಟಿ! - ಡಾ. ಆಶಾ ಬೆನಕಪ್ಪ 15 May 2011.Prajavani. பார்த்தா நாள் 25 March 2015
- ↑ For the poor, death is as miserable as living, by Dr. Asha Benakappa Deccan Herald. 30 April 2011 25 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 Passage Through Human Mortality The New Indian Express November 27, 2014.பார்க்கப்பட்டது 9 December 2014]
- ↑ "I am not that Bad - Dr Asha Benakappa". பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
- ↑ "62nd National Film Awards (PDF)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
- ↑ "'ಹರಿವು' ಅತ್ಯುತ್ತಮ ಪ್ರಾದೇಶಿಕ ಚಿತ್ರ". Prajavani. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
- ↑ 8.0 8.1 "After national honour, 'Harivu' bags top State film award". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016."After national honour, 'Harivu' bags top State film award". Deccan Herald. Retrieved 13 February 2016.
- ↑ "Sanchari Vijay Bags State Best Actor Award & Harivu was picked as the first Best Film". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "International filmmakers to judge Kannada movies". Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.