ஹர்சசரிதம்

ஹர்சசரிதம்(சமஸ்கிருதம்: हर्षचरित, ஆங்கிலம்: Harshacharita) என்பது அரசர் ஹர்சரின் சுயசரிதை ஆகும். இதை எழுதியவர் பாணபட்டர் ஆவார். சமஸ்கிருத மொழியில் ஏழாம் நூற்றாண்டில் இந்நூல் எழுதப்பட்டது. பாணா என அழைக்கப்படும் பாணபட்டர் ஹர்சரின் அரசவைக் கவிஞராவார். ஹர்ஷாசரிதம் பணாவின் முதல் அமைப்பாகும், இந்நூல் சமஸ்கிருத மொழியில் வரலாற்று கவிதை படைப்புகளை எழுதுவதற்கான தொடக்கமாக கருதப்படுகிறது.

ஹர்சசரிதம்
நூலாசிரியர்பாணபட்டர்

சமஸ்கிருதத்தின் முதல் வரலாற்று சுயசரிதையான ஹர்ஷாசரிதம் உள்ளது அழகிய மற்றும் கற்பனையான பாணியில் எழுதப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவின் இயற்கை சூழல் மற்றும் இந்திய மக்களின் அசாதாரண தொழில் பற்றிய பணாவின் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. பாணபட்டர் ஹர்ஷா பேரரசரின் ஆதரவைப் பெற்றதால் அவரது விளக்கங்கள் பக்கச்சார்புடனும் பேரரசரின் நடவடிக்கைகளை அதீதமாக முன்வைக்கின்றன.[1]

பொருளடக்கம் தொகு

அலங்கரிக்கப்பட்ட வசனகவிதை[2] நடையில் எழுதப்பட்ட ஹர்சசரிதம் ஹர்ஷச சக்கரவர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எட்டு அத்தியாயங்களில் விவரிக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களின் பாணபட்டர் ஹர்ஷ சக்ரவர்த்தியின் வம்சாவளியை விவரிக்கிறார். அதன் பின்னர் அவரது ஆரம்பகால வாழ்க்கையை விவரிக்கிறார். ஹர்ஷர் சிறந்த பேரரசர் என பாணா குறிப்பிட்டுள்ளார்.

வர்ணனைகள் தொகு

  • காஷ்மீரைச் சேர்ந்த அறிஞர் சங்கரா இந்நூலுக்கு வர்ணனை எழுதியுள்ளார் ஆகும். மேலும் ருயாக்கா என்பவர் ஹர்சகரிதவர்த்திகா என்று அழைக்கப்படும் ஒரு வர்ணனையை எழுதியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
  • ஹர்ஷசரிதம் நூலை எட்வர்ட் பைல்ஸ் கோவல் மற்றும் ஃபிரடெரிக் வில்லியம் தாமஸ் ஆகியோர் 1897 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.[3]
  • இராணுவ வரலாற்றாசிரியர் கெளசிக் ராய் ஹர்ஷாசரிதாவை "வரலாற்று புனைகதை" என்று வர்ணிக்கிறார்.[4]
  • 1929 இல் விஜயநகரம் மகாராஜா கல்லூரியின் எம்.வி.ராமனாச்சாரி (மேடபெள்ளி வெங்கட ராமநாச்சாரியுலு) தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Keay, John (2000). India: A History. New York: Grove Press. பக். 161–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8021-3797-0. 
  2. A. L. Basham (1981) [1954]. The wonder that was India. Calcutta: Rupa & Co.. பக். 433. https://archive.org/details/wonderthatwasind0000bash_y7p9. 
  3. Rapson, E. J. (April 1898). "The Harṣa-carita of Bāṇa by E. B. Cowell; F. W. Thomas". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland: 448–451. 
  4. Roy, Kaushik (2013). "Bana". in Coetzee, Daniel; Eysturlid, Lee W.. Philosophers of War: The Evolution of History's Greatest Military Thinkers. ABC-CLIO. பக். 21–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-07033-4. https://books.google.co.uk/books?id=DW2jAQAAQBAJ&pg=PA21. 
  5. M. V. Ramanachari (1929) (in Telugu). Andhra Harsha Charitramu. Vizianagaram. https://archive.org/details/ANDHRAHARSHACHARITAMUBYM.V.RAMANACHARIIN1929TELUGU/mode/2up. பார்த்த நாள்: 17 June 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்சசரிதம்&oldid=3580958" இலிருந்து மீள்விக்கப்பட்டது