ஹர்தா மாவட்டம்

ஹர்தா மாவட்டம் (Harda District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஹர்தா ஆகும். போபால் நகரத்திலிருந்து ஹர்தா நகரம் 168 கி மீ தொலைவில் உள்ளது. இது நர்மதாபுரம் கோட்டத்தில் அமைந்துள்ளது.

ஹர்தா மாவட்டம்
हरदा जिला
ஹர்தாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்நர்மதாபுரம் கோட்டம்
தலைமையகம்ஹர்தா
பரப்பு2,644 km2 (1,021 sq mi)
மக்கட்தொகை570,302 (2011)
மக்கள்தொகை அடர்த்தி171/km2 (440/sq mi)
படிப்பறிவு74.04%
பாலின விகிதம்932
வட்டங்கள்9
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நர்மதை ஆற்று சமவெளியில் ஹர்தா மாவட்டத்தின் வடக்கு எல்லையாக நர்மதை ஆறு உள்ளது. இம்மாவட்டத்தின் தெற்கில் சத்புரா மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 50% காடுகளைக் கொண்டது. நர்மதை, கஞ்சால் மற்றும் மாசக் ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம் தொகு

ஹர்தா மாவட்டம் ஒன்பது வருவாய் வட்டங்களையும், மூன்று நகராட்சிகளையும், 567 கிராமங்களையும், மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மாவட்ட எல்லைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்தா_மாவட்டம்&oldid=3890854" இலிருந்து மீள்விக்கப்பட்டது