ஹால்மிடி (Halmidi) என்பது இந்திய மாநிலாமன கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது கோயில் நகரமான பேளூர் அருகே உள்ளது. கன்னட மொழியில் பிரத்தியேகமாக அறியப்பட்ட பண்டைய இந்தியக் கல்வெட்டுகளான, 'ஹால்மிடி கல்வெட்டு' கண்டுபிடிக்கப்பட்ட இடமாக இந்த ஊர் அறியப்படுகிறது. இதற்கு முன்னால், கன்னட சொற்களைக் கொண்ட பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது அசோகரின் பொ.ச. 230-ன் பிரம்மகிரி கட்டளை இருப்பினும், இதுவே கன்னடத்தின் முதல் முழு நீள கல்வெட்டாகும்.[1][2] இந்தக் கல்வெட்டு பொதுவாக 'ஹால்மிடி கல்வெட்டு' என்று அழைக்கப்படுகிறது. மேலும்,மணற்கல் அடுக்கில் செதுக்கப்பட்ட பதினாறு வரிகளைக் கொண்டுள்ளது. இது பொ.ச. 450க்கு தேதியிட்டது. மேலும், கன்னடம் அந்தக் காலத்தில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.[3] இந்தக் கல்வெட்டு பழமையான கன்னடத்தில் பழைய கன்னடத்தின் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. பிராமி எழுத்துக்களைப் போன்ற கன்னட எழுத்து வடிவத்தையும் பயன்படுத்துகிறது.[2]

ஹால்மிடி
நகரம்
ஹால்மிடி கல்வெட்டின் பிரதி ஒரு பீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது
ஹால்மிடி கல்வெட்டின் பிரதி ஒரு பீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது
ஹால்மிடி is located in கருநாடகம்
ஹால்மிடி
ஹால்மிடி
கர்நாடகாவில் ஹால்மிடியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°14′41″N 75°49′14″E / 13.244833°N 75.820683°E / 13.244833; 75.820683
நாடு இந்தியா
Stateகருநாடகம்
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுகேஏ
இணையதளம்karnataka.gov.in
பொ.ச. 450 தேதியிட்ட ஹால்மிடி கல்வெட்டின் பிரதி பழைய கன்னட எழுத்துக்களில் அறியப்பட்ட மிகப் பழமையான முழு நீள கன்னட மொழி கல்வெட்டு ஆகும்

சிக்மகளூர் நகரத்துக்கும் பேளூர் நகரத்துக்கும் இடையில் ஹால்மிடி கிராமம் அமைந்துள்ளது. கல்வெட்டின் கலாச்சார முக்கியத்துவத்தையும், அதன் பாதுகாப்பில் ஹால்மிடி கிராமம் ஆற்றிய பங்கையும் அங்கீகரிக்கும் வகையில், கர்நாடக அரசு கிராமத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.5 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. மேலும், அசல் கல்வெட்டின் ஒரு கண்ணாடியிழை பிளாஸ்ட்டிக்குப் பிரதி ஒன்றை வைக்க ஒரு மண்டபத்தையும் உருவாக்கியட்கு. தற்போது அரசு, வரலாற்று ஆர்வமுள்ள இடமாக கிராமத்தை ஊக்குவிக்கவும் தொடங்கியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Language of the Inscriptions - Sanskrit and Dravidiian - Archaeological Survey of India
  2. 2.0 2.1 "Halmidi inscription". 31 October 2006. 
  3. "Halmidi inscription proves antiquity of Kannada: Moily". 24 October 2004. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹால்மிடி&oldid=3806465" இலிருந்து மீள்விக்கப்பட்டது