ஹிருன்யா

உக்ரைன் நாணயம்

ஹிருன்யா (ஆங்கிலம்:hryvnia ; உக்ரைனிய மொழி:гривня; சின்னம்: ; குறியீடு: UAH) உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன.

ஹிருன்யா
українська гривня (உக்ரைனிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிUAH
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100கோப்பியோக்கா
பன்மைஹிருன்யி
 கோப்பியோக்காகோப்பியோக்கி
குறியீடு
வங்கிப் பணமுறிகள்1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ஹிரிவென்
Coins1, 2, 5, 10, 25, 50 கோப்பியோக், 1 ஹிருன்யா
மக்கள்தொகையியல்
User(s) உக்ரைன்
Issuance
நடுவண் வங்கிஉக்ரைன் தேசிய வங்கி
 Websitewww.bank.gov.ua
Valuation
Inflation12% (2009 கணிப்பு)
 SourceNovynar, 6 ஜனவரி 2010

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிருன்யா&oldid=2135318" இருந்து மீள்விக்கப்பட்டது